காங்கிரஸ் கட்சிக்கு சோனியா தொடர்ந்து வழிகாட்டியாக திகழ்வார்: வீரப்ப மொய்லி

கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகும் காங்கிரஸூக்கு சோனியா காந்தி தொடர்ந்து வழிகாட்டியாகத் திகழ்வார் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான வீரப்ப மொய்லி தெரிவித்தார்
காங்கிரஸ் கட்சிக்கு சோனியா தொடர்ந்து வழிகாட்டியாக திகழ்வார்: வீரப்ப மொய்லி

கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகும் காங்கிரஸூக்கு சோனியா காந்தி தொடர்ந்து வழிகாட்டியாகத் திகழ்வார் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கடந்த 2004 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் பல கட்சிகளை ஒன்றிணைத்து வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தவர் கட்சித் தலைவர் சோனியா காந்தி. கட்சிக்காக அவர் சீரிய பங்களிப்பை ஆற்றி வருகிறார்.
வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைப்பதிலும் அவர் முக்கியப் பங்காற்றுவார். ஒத்த கருத்துடைய கட்சிகளை காங்கிரஸூடன் இணைப்பதற்கு அவரால் முடியும்.
காங்கிரஸ் தலைவர் பதவியில் இல்லாதபோதும் கட்சிக்கு சோனியா தொடர்ந்து வழிகாட்டியாகத் திகழ்வார். அவரது தலைமையில் காங்கிரஸ் கூட்டணி பல மாநிலங்களில் ஆட்சிக்கு வந்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, தகவல் உரிமைச் சட்டம், கிராமப்புற மக்கள் பயனடையும் வகையில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் ஆகியவை கொண்டுவரப்பட்டன.
சோனியா காந்தி, ராகுலுக்கு மட்டும் தாயார் அல்ல; கட்சிக்கும் அவரே தாயார். கட்சியை வளர்த்தெடுப்பதற்காக அவர் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்குவார் என்றார் வீரப்ப மொய்லி.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி கடந்த 4-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com