குஜராத்: வாக்கு இயந்திரத்தை வாடகை ஜீப்பிலேயே மறந்து விட்ட தேர்தல் அதிகாரிகள்

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை நடந்த முதல் கட்டத் தேர்தலின் போது வாக்குச்சாவடிக்குக் கொண்டு வந்த மின்னணு இயந்திரம் ஒன்றை அதிகாரிகள் வாடகை ஜீப்பிலேயே விட்டுவிட்டுள்ளனர்.
குஜராத்: வாக்கு இயந்திரத்தை வாடகை ஜீப்பிலேயே மறந்து விட்ட தேர்தல் அதிகாரிகள்


ராஜ்பிப்லா: குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை நடந்த முதல் கட்டத் தேர்தலின் போது வாக்குச்சாவடிக்குக் கொண்டு வந்த மின்னணு இயந்திரம் ஒன்றை அதிகாரிகள் வாடகை ஜீப்பிலேயே விட்டுவிட்டுள்ளனர்.

தேர்தல் அதிகாரிகள் மறந்து சென்ற வாக்கு இயந்திரத்தை, ஜீப் ஓட்டுநர் பத்திரமாகக் கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தின் தேடியப்பாடா தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு மின்னணு வாக்கு இயந்திரங்களை வாடகை ஜீப்பில் கொண்டு வந்த அதிகாரிகள், ஒரு இயந்திரத்தை மறந்து ஜீப்பிலேயே விட்டு விட்ட சம்பவம்வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குஜராத் சட்டப்பேரவைக்கு கடந்த 9ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளுக்கு, மின்னணு வாக்கு இயந்திரம் கொண்டும் செல்லும் பணிகளின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரி ஆர்.எஸ். நினமா கூறுகையில், அந்த மின்னணு வாக்கு இயந்திரம், கூடுதலாக கொடுக்கப்பட்ட இயந்திரம் என்று விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் கூடுதல் வாக்கு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டன. கஞ்சல் கிராமத்தில் உள்ள தெடியபாடா தாலுகாவில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு, கூடுதலாக கொடுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் மொத்தம் 6 இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டன. ஏதேனும் ஒரு இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு நேர்ந்தால் அதனை மாற்றிக் கொள்ள கூடுதலாகக் கொடுக்கப்பட்ட மின்னணு இயந்திரத்தைத் தான் அதிகாரிகள் தவறுதலாக ஜீப்பில் விட்டுவிட்டனர்.

இதையடுத்து, வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு இயந்திரங்களைத் திருப்பிக் கொடுக்கும் போது ஒரு இயந்திரம் மாயமானது குறித்து தெரிவித்து, இயந்திரம் கிடைத்ததும், அதனை பத்திரமாக அதிகாரிகள் கொண்டு வந்து சேர்த்தனர் என்றார்.

இந்த சம்பவம் குறித்து ஜீப் ஓட்டுநர் கூறுகையில், வெள்ளிக்கிழமை இரவு தேர்தல் அதிகாரிகளை இறக்கிவிட்டுவிட்டு வந்தேன். காலையில் ஜீப்பில் ஒரு வாக்குப் பதிவு இயந்திரம் இருந்ததைப் பார்த்ததும், அருகில் உள்ள ஒரு உள்ளூர் கட்சி அலுவலகத்தில் தெரிவித்தேன். அவர்கள் அதை தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்க உதவினர் என்கிறார்.

பணியின் போது கவனக்குறைவாக இருந்தக் குற்றத்துக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com