நாடு முழுவதும் மதுவுக்குத் தடை: நிதீஷ் வலியுறுத்தல்

நாடு முழுவதும் மதுவகைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் மதுவுக்குத் தடை: நிதீஷ் வலியுறுத்தல்

நாடு முழுவதும் மதுவகைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:
குஜராத்தில் மதுவகைகளுக்கு தடை விதிக்கப்பட்டபோது, பிகார் மாநிலமும் தடை விதித்து, தன்னாலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று காட்டியது. அதுபோல், நாடு முழுவதும் மதுவகைகளுக்கு ஏன் தடை விதிக்க முடியாது?
ஹிந்து மதம், இஸ்லாம், சீக்கிய மதம், பௌத்த மதம், ஜைன மதம் ஆகியவை, மது அருந்துவதை எதிர்க்கின்றன. நாடு முழுவதும் மதுவகைகளுக்குத் தடை விதிக்கப்படும்பட்சத்தில், சமூக நல்லிணக்கத்துக்கு அதுவொரு மிகப்பெரிய அறிகுறியாக இருக்கும். அனைத்து மதங்களுக்கும் அளிக்கப்படும் மரியாதையாகவும் அது இருக்கும். மதுவகைகளுக்குத் தடை விதிப்பதன் மூலம், சமூகத்தில் குற்றச் சம்பவங்கள் குறையும். சாலை விபத்துகள், பல்வேறு நோய்களும் குறையும் என்று நிதீஷ் குமார் கூறினார்.
நிகழ்ச்சியில் தில்லி மாநில ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நர்சிங் ஷா பேசுகையில், "தில்லியில் 1,600 அங்கீகரிக்கப்படாத காலனிகள் உள்ளன. அவற்றை சட்டரீதியில் முறைப்படுத்துவதில், காங்கிரஸூம், ஆம் ஆத்மி கட்சியும் தோல்வியடைந்து விட்டன. இதனால், இங்கு வசிப்போரின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தில்லியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்தக் காலனிகளை முறைப்படுத்துவோம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com