அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரி 'நீட்' தேர்வு வினாத்தாள்: சிபிஎஸ்இ தகவல்! 

அடுத்த ஆண்டு முதல் 'நீட்' தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரி வினாத்தாள் பயன்படுத்தப்படும் என்று  உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரி 'நீட்' தேர்வு வினாத்தாள்: சிபிஎஸ்இ தகவல்! 

புதுதில்லி: அடுத்த ஆண்டு முதல் 'நீட்' தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரி வினாத்தாள் பயன்படுத்தப்படும் என்று  உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தகவல் தெரிவித்துள்ளது

கடந்த ஆண்டு நாடு முழுவதும் மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு என 'நீட்' எனப்படும் தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான வினாத்தாள்கள் பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தன.அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை விட கேள்வித்தாள்கள் இன்னும் கடினமாக இருந்தது என்று குற்றம் சாட்டப்பட்டது.  

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் பொழுது, மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்ததாவது:

கடந்த ஆண்டு நடைபெற 'நீட்'  தேர்வின் பொழுது ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான வினாத்தாள்கள் பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்ததன் காரணமாக, வரும் ஆண்டு 'நீட்' தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரி வினாத்தாள் பயன்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது,

இவ்வாறு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com