தில்லியில் டெங்கு பாதித்தோர் எண்ணிக்கை 9,169 ஆக உயர்வு

தலைநகர் தில்லியில் நிகழாண்டு சீசனில்  டெங்குவால்  பாதிக்கப்பட்டாரோ எண்ணிக்கை 9,169 ஆக அதிகரித்துள்ளது என்று  மாநகராட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லியில் டெங்கு பாதித்தோர் எண்ணிக்கை 9,169 ஆக உயர்வு

தலைநகர் தில்லியில் நிகழாண்டு சீசனில்  டெங்குவால்  பாதிக்கப்பட்டாரோ எண்ணிக்கை 9,169 ஆக அதிகரித்துள்ளது என்று  மாநகராட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம்  மட்டும் தில்லியில் புதிதாக 97 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். டிசம்பர் 2-ஆம் தேதி நிலவரப்படி டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 9,072 ஆக இருந்தது.  இந்நிலையில்,  தில்லியின் மூன்று மாநகராட்சிகள் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையின்படி, டிசம்பர் 9-ஆம் தேதி நிலவரப்படி தலைநகரில் டெங்குவால் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 9,169 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்,  டிசம்பர் 9-ஆம் தேதி வரையிலான காலத்தில் தலைநகரில் சிக்குன்குனியா, மலேரியா நோயால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை முறையே 1,139 மற்றும் 923 ஆக இருந்தது. இந்த ஆண்டில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 9,169 நோயாளிகளில் 4,681 பேர் தில்லியைச் சேர்ந்தவர்கள். 4,488 பேர் பிற மாநிலங்களில் இருந்து தில்லிக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் ஆவர். 

ஆகஸ்ட் 1-ஆம் தேதி கொசுக் கடியால் ஏற்படும் டெங்கு நோய் பாதிப்புக்கு உள்ளானதாக முதல் நோயாளி கண்டறியப்பட்டார்.  டெங்கு நோயால் சர் கங்கா ராம் மருத்துவமனையில்  12 வயது சிறுவன் உயிரிழந்தான்.  எனினும், எல்என்ஜேபி மருத்துவமனை,  ஆர்எம்எல் மருத்துவமனை ஆகியவற்றில் டெங்கு நோயால் மூவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், அதை மாநகராட்சி தரப்பு ஏற்கவில்லை. ஆர்எம்எல் மருத்துவமனை நிர்வாகத் தரப்பின்படி,  நவம்பர் 22-ஆம் தேதி சௌர்யா பிரதாப் சிங் (7) என்ற சிறுவன்  நவம்பர் 22-ஆம் தேதி உயிரிழந்தான்.  தில்லியில் அக்டோபர் மாதத்தில் மட்டும் டெங்கு நோயால் பாதித்தோர் எண்ணிக்கை 2,022 ஆக இருந்தது. கடந்த மாதத்தில் 816 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகினர்.  இந்த மாதம் 9-ஆம் தேதி நிலவரப்படி  36 பேர் இந்நோய் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகக் கண்டறியப்பட்டது.

நிகழாண்டு டெங்கு,  சிக்குன்குனியா  முன்கூட்டியே பரவத் தொடங்கியது. தெற்கு தில்லி மாநகராட்சி தகவலின்படி தில்லியில் டிசம்பர் 9-ஆம் தேதி நிலவரப்படி 2 லட்சத்து 10 ஆயிரத்து 752 வீடுகளில் கொசு உற்பத்தி இருந்ததாகக் கண்டறியப்பட்டது. வடக்கு, தெற்கு, கிழக்கு தில்லி மாநகராட்சிகள் முறையே 705,  704,  420 நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.  கடந்த ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் 9 நோயாளிகள் உள்பட தில்லியின் பல்வேறு மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 21  பேர் டெங்கு நோயால் உயிரிழந்தனர். எனினும், மாநகராட்சி தரப்பில் 10 பேர் மட்டுமே டெங்குவால் இறந்ததாகவும், 17 பேர் மலேரியா நோய் பாதிப்பால் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 

தில்லியில் கடந்த ஆண்டில், டெங்கு பாதிப்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகமாகக் காணப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி வரை 12,221 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 9, 749 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com