மல்லையாவை நாடு கடத்தக் கோரும் வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது

தொழிலதிபர் விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரும் வழக்கின் விசாரணை, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.
மல்லையாவை நாடு கடத்தக் கோரும் வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது

தொழிலதிபர் விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரும் வழக்கின் விசாரணை, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.
அப்போது, இந்திய நீதித் துறை, சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகள் பாரபட்சத்துடன் செயல்படுவதாக மல்லையா தரப்பு வழக்குரைஞர் குற்றம் சாட்டினார். 
இந்தியாவில் உள்ள வங்கிகளில் ரூ.9,000 கோடி வரை கடன் வாங்கி விட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாத மல்லையா, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து லண்டனில் தங்கியுள்ளார். அவருக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்கு, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அதனடிப்படையில், வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மல்லையாவுக்கு எதிராக, கடந்த 4-ஆம் தேதி விசாரணை தொடங்கியது. இதில், இந்திய அரசு சார்பில் கிரெளன் பிராசிகியூஷன் சேவைகள் நிறுவனம் வாதாடி வருகிறது. இந்த நிலையில், வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணை தொடங்கியது.
மல்லையா சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கிளேர் மான்ட்கோமெரி, தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தார். 
மேலும், இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம், சிபிஐ ஆகியவை பிறப்பித்த உத்தரவுகள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு சட்ட நிபுணர் மார்ட்டின் லாவிடம் மான்ட்கோமெரி கேட்டுக் கொண்டார். 
அப்போது அவர் கூறுகையில், ''உச்ச நீதிமன்றத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறேன். ஆனால், நீதிமன்றத்தின் சில தீர்ப்புகள் சந்தேகத்தை எழுப்புகின்றன. ஓய்வுபெறும் நிலையில் உள்ள நீதிபதிகள், நடுநிலையுடன் செயல்படுகிறார்களா? என்ற சந்தேகம் உள்ளது'' என்றார்.
அதைத் தொடர்ந்து வாதாடிய கிளேர் மான்ட்கோமெரி, ''மல்லையாவுக்கு எதிராக குற்றவியல் வழக்குகளைத் தொடுக்குமாறு வங்கிகளுக்கு சிபிஐ தரப்பு நெருக்கடி கொடுத்தது'' என்றார்.
மல்லையா தரப்பினர் முன்வைக்கும் வாதங்கள், வரும் வியாழக்கிழமை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் முடிவில், மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அது தொடர்பான உத்தரவை பிரிட்டன் உள்துறைச் செயலர் 2 மாதங்களில் பிறப்பித்தாக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com