கார்டோசாட் 2 எஃப் செயற்கைக்கோள்: ஜனவரி முதல் வாரத்தில் விண்ணில் ஏவப்படும்!: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

வரும் ஜனவரி முதல் வாரத்தில் பிஎஸ்எல்வி எக்ஸ்.எல். வகை ராக்கெட்டில் கார்டோசாட் 2 எஃப் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.
கார்டோசாட் 2 எஃப் செயற்கைக்கோள்: ஜனவரி முதல் வாரத்தில் விண்ணில் ஏவப்படும்!: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

வரும் ஜனவரி முதல் வாரத்தில் பிஎஸ்எல்வி எக்ஸ்.எல். வகை ராக்கெட்டில் கார்டோசாட் 2 எஃப் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவின் கார்டோசாட் 2-எஃப் செயற்கைக்கோளுசடன், வெளிநாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைக்கோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளன. இந்த செயற்கைக்கோள்கள், ஆந்திரம் மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி40 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது.
புத்தாண்டில் புது முயற்சி: இஸ்ரோ கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஐஆர்என்எஸ்எஸ் 1எச் செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து புத்தாண்டில் வெற்றிகரமாக ராக்கெட் ஏவும் பணியை மேற்கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
கார்டோசாட் 2 இ: இந்தியா சார்பில் கார்டோசாட் தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் வரிசையாக, விண்ணில் ஏவப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் பிப்ரவரி மாதம் கடைசியாக கார்டோசாட் 2 இ செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
இதன் முக்கியப் பணி பூமியை படமெடுத்து அனுப்புதல், கடற்போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதாகும். மேலும் இது பூமியிலிருந்து 505 கி.மீ. உயரத்தில் அதன் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோளில் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாகப் படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். தொலையுணர்வு கருவிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
முதன்முதலில் கடந்த 2005 -ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-6 ராக்கெட்டில் முதல் கார்ட்டோ சாட்-1 செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அதையடுத்து பி.எஸ்.எல்.வி. சி-7, பி.எஸ்.எல்.வி. சி-9, பி.எஸ்.எல்.வி. சி-15, பி.எஸ்.எல்.வி. சி-34 உள்ளிட்ட ராக்கெட்டுகளில் கார்ட்டோ சாட் வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. 
கார்டோசாட் பணி என்ன?: இந்தியா விண்ணில் செலுத்தியுள்ள செயற்கை கோள்களின் கார்டோசாட் 2 பல விஷயங்களில் வித்தியாசமானது. இதன் 2 கேமராக்கள் 2 மீட்டர் விட்டத்தில் இருக்கும் எந்தவொரு பொருளையும் துல்லியமாக படம் எடுக்கும். இக்கேமிரா விண்ணிலிருந்து முப்பரிமாணத்தில் 30 கிலோ மீட்டர் பரப்பளவில் கருப்பு வெள்ளை படங்களாக எடுக்கும்.
இந்த கேமராக்களை செயற்கைகோளின் சுழற்சியையொட்டி கோணங்களை மாற்றி ஒரே பொருளை இருவேறு கோணங்களில் படமெடுத்து 3டி படங்களை தரைக் கட்டுப்பாட்டு அறையில் பெற்றுக்கொள்ள முடியும். தரைக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ள முடியாத நேரங்களில் இந்தப் படங்களை 120 ஜி.பி. அளவில் சேமிக்கவும் செயற்கைக்கோளில் வசதி உள்ளது.
இதுவரை தரமான படங்கள் தேவையெனில், அமெரிக்காவில் இருந்து அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி இருந்தது. இந்த செயற்கைகோள் மூலம் குறைந்த செலவில் படங்களைப் பெற முடியும்.
இந்த செயற்கைகோள் மூலம் நீர்வள மேம்பாடு, காடுகள் அழிக்கப்படுவதை கணித்து தடுத்தல், மக்கள் குடியிருப்புகளை திட்டமிட்டு செம்மைப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும். பெருநகர மேம்பாட்டில் அமைந்துள்ள தனியார் நிறுவனங்களுக்கு இது மிகவும் உறுதுணையாக இருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com