'ஜல்லிக்கட்டு பாரம்பரியம் காக்க தொடர்ந்து குரல் கொடுக்கப்படும்'

தமிழகத்தின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு வீர விளையாட்டைப் பாதுகாக்கும் வகையில் தொடர்ந்து குரல் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் மாநிலத் தலைவர் பி.ராஜசேகரன் தெரிவித்தார்.
'ஜல்லிக்கட்டு பாரம்பரியம் காக்க தொடர்ந்து குரல் கொடுக்கப்படும்'

தமிழகத்தின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு வீர விளையாட்டைப் பாதுகாக்கும் வகையில் தொடர்ந்து குரல் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் மாநிலத் தலைவர் பி.ராஜசேகரன் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு நடத்தத் தடை கோரிய விலங்குகள் நல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றது. இந்த வழக்கின் விசாரணையைப் பார்வையிடுவதற்காக, தில்லி வந்திருந்த ராஜசேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜல்லிக்கட்டை தடை செய்ய விலங்குகள் நல அமைப்பான பீட்டாவும், அது சார்ந்த பிற அமைப்புகளும் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது தமிழக அரசின் வழக்குரைஞர்களும், மத்திய அரசின் தலைமை வழக்குரைஞரும், 'எதற்காக ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. 
அதன் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளனர். பாரம்பரியம், கலாசாரமிக இந்த விளையாட்டை நடத்த தமிழக அரசு சட்டம் இயற்றியது சரிதான்' என்றும் வாதிட்டனர். இருப்பினும், இந்த விளையாட்டு ஏதோ ஒரு பகுதியில் விளையாடப்படும் விளையாட்டாக எதிர்த்தரப்பினர் கேள்வி எழுப்பினர். 
தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கின்றனாரோ அங்கெல்லாம் தமிழர்களின் பழக்க வழக்கம், கலாசாரம், பண்பாடு ஆகியவை இருக்கும். அது ஒரு பகுதியில் இருப்பது என்று மட்டும் கூறுவது தவறாகும். 
தமிழகத்தின் பாரம்பரியத்தை நிலைநாட்ட தமிழன் எப்போதும் குரல் கொடுப்பான். தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியம் தொடரும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை பேணிக் காக்க நாங்கள் தொடர்ந்து போராடுவோம். 
அதே போன்று தமிழக அரசு வகுத்துள்ள உரிய பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்து இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com