காங்கிரஸ் தலைவராக கடைசி முறையாக உங்கள் மத்தியில் பேசுகிறேன்: சோனியா

ராகுல் காந்தி பொறுப்பேற்பு விழாவில் தொண்டர்கள் மத்தியில் பேசிய சோனியா, காங்கிரஸ் கட்சித் தலைவராக கடைசி முறையாக உங்கள் மத்தியில் பேசுகிறேன் என்று கூறினார்.
காங்கிரஸ் தலைவராக கடைசி முறையாக உங்கள் மத்தியில் பேசுகிறேன்: சோனியா


புது தில்லி: ராகுல் காந்தி பொறுப்பேற்பு விழாவில் தொண்டர்கள் மத்தியில் பேசிய சோனியா, காங்கிரஸ் கட்சித் தலைவராக கடைசி முறையாக உங்கள் மத்தியில் பேசுகிறேன் என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்று, ராகுலை வாழ்த்திப் பேசிய சோனியா,  காங்கிரஸ் தலைவராக கடைசி முறையாக உங்களிடம் பேசுகிறேன் என்று கூறி தனது உரையைத் தொடங்கினார்.

20 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் தலைவராக என்னை தேர்ந்தெடுத்தீர்கள். இன்று ராகுல், கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். புதிய தலைமை மீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டும். தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல் காந்திக்கு எனது ஆசிர்வாதமும், வாழ்த்துகளும் என்று கூறினார்.

சோனியா பேசிக் கொண்டிருந்தபோது இடையே,  தொடர்ச்சியாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் பேச்சை நிறுத்திவிட்டு சிறிது நேரம் மௌனம் காத்தார்.

பிறகு தனது உரையைத் தொடர்ந்தார். வெளிநாட்டில் இருந்து வந்த நான், சொந்த மகளாக நடத்தப்பட்டேன். குடும்பத்தில் ஒவ்வொருவரும் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் சிறை சென்றவர்கள்.

இந்திராகாந்தி கொல்லப்பட்டது என்னை உலுக்கிவிட்டது. இந்திரா காந்தியை இழந்த போது நான் என் தாயை இழந்தது போல உணர்ந்தேன். இந்திரா காந்திக்குப் பிறகு எனது கணவர் ராஜீவ் காந்தியும் கொல்லப்பட்டார். இதனால் பயந்த நான் என் குழந்தைகளை அரசியலை விட்டு விலகி இருக்க வைத்தேன்.

இந்திராவும், ராஜீவ்வும் இல்லாத நிலையில், இருவருமே இல்லாததால் காங்கிரஸ் கட்சியை வழி நடத்த ஆள் இல்லாமல் தொண்டர்கள் துவண்டு போயினர்.  அப்போது, காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை வந்தது. எனது மொத்த பலமும் போயிருந்தது. ஆனால், கட்சித் தொண்டர்கள் அளித்த பலத்தால் கட்சி மீண்டும் வெற்றிகளைப் பெற்றது.

முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற போது பதட்டத்தில் இருந்தேன். கட்சியில் ஒற்றுமையை நிலைநாட்ட பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. என்னை மகளைப் போல பார்த்துக் கொண்ட இந்திரா காந்தியிடம் இருந்து நிறையக் கற்றுக் கொண்டேன் என்று சோனியா பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com