தீவிரவாதிகளை ஒழிப்பது மட்டுமே காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வாகாது: மெஹபூபா முஃப்தி

தீவிரவாதிகளை ஒழிப்பது மட்டுமே காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வாக அமைந்துவிடாது என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளை ஒழிப்பது மட்டுமே காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வாகாது: மெஹபூபா முஃப்தி

தீவிரவாதிகளை ஒழிப்பது மட்டுமே காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வாக அமைந்துவிடாது என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். அமைதி வழியிலான பேச்சுவார்த்தையே தற்போதைய சூழலில் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கோவா தலைநகர், பனாஜியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற மெஹபூபா, பார்வையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காஷ்மீர் என்றவுடனேயே தற்போது மக்கள் என்ன நினைக்கிறார்கள்? தீவிரவாதம், ராணுவம், துப்பாக்கிச் சூடு, கல்வீச்சுச் சம்பவங்கள், வன்முறை என்ற வார்த்தைகள்தான் காஷ்மீர் குறித்த பேச்சுக்களில் நிறைந்திருக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும். நான் சிறுமியாக இருந்தபோது, எனது தந்தையும், மாநில முன்னாள் முதல்வருமான முஃப்தி முகமது சயீதை நல்ல மனிதர் என்று சிலர் கூறுவர். ஆனால், அவர் ஓர் இந்தியன் என்று அடுத்ததாக ஒரு வார்த்தையும் கூறுவர். நல்ல மனிதர் சரி; எதற்காக இந்தியர் என்பதை குறிப்பிட்டுக் கூற வேண்டும்? என அப்போது எனக்குப் புரியவில்லை. பிறகுதான் அதன் பின்னணியில் பிரிவினைவாத சித்தாத்தங்கள் இருப்பதற்கான காரணங்கள் விளங்கியது.
தற்போதைய சூழ்நிலையில் தீவிரவாதிகளை ஒழித்தால் மட்டும் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்துவிடாது. 100 பேரை அழித்தால் 200 பேர் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி விடுவார்கள். இப்போதைய தேவை அமைதி வழியிலான பேச்சுவார்த்தையும், அரவணைப்புடன் கூடிய வழிமுறைகளும்தான்.
ஒரே நாளில் அவை சாத்தியமாகாது என்றாலும், விரைவில் காஷ்மீரின் நிலை மாறும் என்பதில் மாற்றமில்லை. அதற்காக எவரும் காஷ்மீர் மக்களுக்கு தேசியத்தைக் கற்பிக்க வேண்டியதில்லை. உண்மையைச் சொல்வதென்றால் விரைவில் நாங்கள் நாட்டுக்கே தேசியத்தைக் கற்றுக் கொடுப்போம் என்றார் மெஹபூபா முஃப்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com