குஜராத் தேர்தலில் 5.5 லட்சம் வாக்குகள் 'நோட்டா'-வில் பதிவு!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 5.5 லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
குஜராத் தேர்தலில் 5.5 லட்சம் வாக்குகள் 'நோட்டா'-வில் பதிவு!

குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கான சடடப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து அங்கு திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதில், இரு மாநிலங்களிலும் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறது. குஜராத்தைப் பொறுத்தவரையில் 6-ஆவது முறையாக பாஜக ஆட்சியமைக்கப்போகிறது. மேலும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது.

இதன்மூலம் நாடு முழுவதிலும், பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்தது. அதேசமயம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 4-ஆக சரிந்தது. 

இந்நிலையில், குஜராத் தேர்தலின் போது 5.5 லட்சம் பேர் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். இது பாஜக மற்றும் காங்கிரஸுக்கு அடுத்து 3-ஆவது இடமாகும்.

இந்த தேர்தலில் பாஜக-வுக்கு 49.10 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதுபோல காங்கிரஸுக்கு 41.4 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதில் 1.8 சதவீதம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். அனைத்து சுயேட்சைகளுக்கும் சேர்த்து 4.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com