தேர்தலில் 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு தடைவிதிக்க வேண்டும்: டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி 

தேர்தலில் வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
தேர்தலில் 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு தடைவிதிக்க வேண்டும்: டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி 

தேர்தலில் வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாதில் அவர், பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:
மத்திய, மாநில அமைச்சர்கள் பதவிகளுக்கு தற்போது 25 வயது என்பது தகுதியாக உள்ளது. இந்த வயது 35ஆக உயர்த்தப்பட வேண்டும்.
எம்.பி., எம்எல்ஏக்கள் ஆவதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி நிர்ணயிப்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டும். அரசியலில் கல்வி கற்காத புத்திசாலி அரசியல்வாதிகள் உள்ளனர்; படித்த முட்டாள் அரசியல்வாதிகளும் உள்ளனர். எனவே, கல்வியானது ஒருவரை தகுதியானவராக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், மாநில மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியை பொறுத்தமட்டில் அடிப்படை கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட வேண்டும். அப்படி செய்வது நல்லது ஆகும். எனவே, அமைச்சர்கள்தான் கோப்புகளை பார்க்கின்றனர்; முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள்.
கல்வி தகுதி என்பது மிகவும் முக்கியமானதாகும். வயது தகுதியை 35ஆக நிர்ணயித்தால் சிறப்பாக இருக்கும். அந்த வயதில் அதிகளவில் முதிர்ச்சி வந்துவிடும். கல்வியை விட ஒருவரது குணநலன்தான் மிகவும் முக்கியமாகும். எனவே அமைச்சராவதற்கு 35 வயதை தகுதியாக நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 35 அல்லது 40 வயது ஆகாத ஒருவரை அமைச்சராக்கக் கூடாது.
சில அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். எனவே குறைந்தபட்சம் அமைச்சர்களையாவது பொறுப்புடையவர்களாக மாற்றுவது அவசியமாகும். அப்படி செய்தால், அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட முடியாது. 
அதேபோல், கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டு வருவோரை அமைச்சர்களாக நிர்ணயிக்கக் கூடாது. மேலும், மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் வகையில் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகளின் மொத்த பதவிக்காலமான 5 ஆண்டுகளில், இரண்டரை ஆண்டுகளை அவர்கள் நிறைவு செய்தபிறகு இதை செயல்படுத்தும் வகையில் நடைமுறை இருக்க வேண்டும். அதாவது, ஐந்தாண்டு பதவிக்காலத்தில் முதல் இரண்டரை ஆண்டுகளில் மக்கள் பிரதிநிதிகள் சரியாக பணிபுரியாத பட்சத்திலோ, கிரிமினல் செயலில் அவர்கள் ஈடுபடும் பட்சத்திலோ, அவர்களை திரும்ப அழைக்கும் வகையில் நடைமுறை இருக்க வேண்டும்.
தேர்தலில் வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை அனுமதிக்கலாமா என்று கேட்கிறீர்கள். இதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இதுதொடர்பாக பிரதமருக்கு கடந்த 2004ஆம் ஆண்டில் நான் கடிதம் எழுதினேன். அதில் 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடுவதை அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்திருந்தேன் என்றார் கிருஷ்ணமூர்த்தி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com