மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுங்கள்: வெங்கய்ய நாயுடு

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற அரசியல் கட்சிகள் தங்களுக்கிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுங்கள்: வெங்கய்ய நாயுடு

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற அரசியல் கட்சிகள் தங்களுக்கிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு உரிய இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மாநில சட்டப் பேரவைகள், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. தனிப்பட்ட முறையில் நான் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்கிறேன்.
இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் கலந்து பேசி கருத்தொற்றுமையை ஏற்படுத்திக் கொள்ளும் என்று நம்புகிறேன். இந்த விஷயத்துக்கு எவ்வித அரசியல் சாயமும் பூசக் கூடாது. விரைவில் மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
மகளிருக்கு பஞ்சாயத்துக்கு அமைப்புகளில் இப்போது உரிய இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. ஆனால், இதில் அப்பெண்களின் கணவர், தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர்தான் மக்கள் பிரதிநிதிபோல செயல்படுகிறார்கள். மகளிரை அவர்கள் கைப்பாவையாகப் பயன்படுத்துகின்றனர் என்று பரவலாக குற்றம்சாட்டு உள்ளது. பெண்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது மக்கள் பணியாற்ற வேண்டும். அந்த மாற்றம் இப்போது தொடங்கிவிட்டது. பல இடங்களில் பெண்கள் தங்கள் உரிமைகளை போராடி நிலைநாட்டி வருகின்றனர்.
பெண்களுக்கும் உரிய அதிகாரம் கிடைக்கும்போதுதான் புதிய இந்தியா உருவாகும். ஒரு குடும்பத்தில் ஆண், பெண் குழந்தைகள் இடையே எவ்வித பாரபட்சமும் இருக்கக் கூடாது. குடும்பத்தின் சொத்துகள் ஆண், பெண் இருவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
பாரதத் தாய் என்றுதான் நமது தேசம் அழைக்கப்படுகிறது. ஆன்மிகத்தில் கூட கல்விக் கடவுளாக சரஸ்வதியும், காக்கும் சக்தியாக பார்வதி தேவியும், செல்வத்தின் அதிபதியாக லட்சுமி தேவியும் விளங்குகிறார்கள். பெண்களுக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் அளிப்பதுதான் நமது கலாசாரமாகும். வெளிநாட்டுப் படையெடுப்புகள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இவை மாறிவிட்டன.
உரிய வாய்ப்பு கிடைத்தால் பெண்கள் அனைத்துத் துறையிலும் சாதிப்பார்கள். நமது நாட்டில் இப்போது பாதுகாப்பு அமைச்சர் (நிர்மலா சீதாராமன்), வெளியுறவு அமைச்சர் (சுஷ்மா ஸ்வராஜ்), மக்களவைத் தலைவர் (சுமித்ரா மகாஜன்) ஆகிய முக்கியப் பொறுப்புகளில் பெண்கள்தான் உள்ளனர் என்றார்.
முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com