ஹிமாச்சல் பிரதேச முதல்வராகிறார் ஜெய்ராம் தாக்குர்? வெள்ளியன்று அறிவிப்பு! 

ஹிமாச்சல் பிரதேச மாநில முதல்வராக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் தாக்குர் தேர்வு  செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான முறையான அறிவிப்பு வெள்ளியன்று வெளியாகும்... 
ஹிமாச்சல் பிரதேச முதல்வராகிறார் ஜெய்ராம் தாக்குர்? வெள்ளியன்று அறிவிப்பு! 

ஷிம்லா: ஹிமாச்சல் பிரதேச மாநில முதல்வராக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் தாக்குர் தேர்வு  செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான முறையான அறிவிப்பு வெள்ளியன்று வெளியாகும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில் ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸிடமிருந்து பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரான பிரேம் குமார் துமல் தனது சுஜன்பூர் தொகுதியில் தோல்வியடைந்தார்.     

இதனைத் தொடர்ந்து புதிய சட்டப்பேரவைக்கு குழுத் தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடி  அக்கட்சித் தலைமைக்கு உருவானது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா மற்றும் மூத்த தலைவர் ஜெய்ராம் தாக்குர் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் ஐந்து முறை எம்.எல்.வாக இருந்தவரும், மூத்த தலைவருமான ஜெய்ராம் தாக்குர் முதல்வராகத் தேர்வு  செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான முறையான அறிவிப்பு வெள்ளியன்று வெளியாகும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.       

இதற்காக கட்சி எம்.எல்.ஏக்களுடன் பேசுவதற்காக மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் நரிந்தர்  சிங் தோமர் அடங்கிய குழு வியாழன் அன்று ஷிம்லா வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com