இந்தியாவில் ஒரு மாதத்திற்கு எத்தனை ஜி.பி மொபைல் டேட்டா செலவு பண்றாங்க தெரியுமா? 

இந்தியாவில் ஒரு மாதத்திற்கு 150 கோடி ஜி.பி மொபைல் டேட்டா செலவு செய்யப்படுகிறது என்றும், இதன் காரணமாக உலகிலேயே இந்தியாதான் மொபைல் டேட்டா பயன்பாட்டில் முதலாவதாக இருக்கிறது...
இந்தியாவில் ஒரு மாதத்திற்கு எத்தனை ஜி.பி மொபைல் டேட்டா செலவு பண்றாங்க தெரியுமா? 

சென்னை: இந்தியாவில் ஒரு மாதத்திற்கு 150 கோடி ஜி.பி மொபைல் டேட்டா செலவு செய்யப்படுகிறது என்றும், இதன் காரணமாக உலகிலேயே இந்தியாதான் மொபைல் டேட்டா பயன்பாட்டில் முதலாவதாக இருக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக நிதி ஆயோக் அமைப்பின் தலைவர் அமிதாப் கண்ட் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

"அற்புதம்! ஒரு மாதத்திற்கு எத்தனை 150 கோடி ஜி.பி மொபைல் டேட்டா செலவு செய்யப்படுவதன் மூலம், இந்தியா தற்பொழுது உலகிலேயே அதிக அளவில் மொபைல் டேட்டா பயன்படுத்தும் நாடாக உருவாகி இருக்கிறது. நமது நாட்டில் மொபைல் டேட்டா பயன்பாடானது அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளின் பயன்பாடுகளைக் கூடினாலும் அதனை விட அதிக அளவில் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இதனை எதை ஆதாரமாக வைத்து அவர் கூறுகிறார் என்பதனை தெரிவிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com