நாளை பாஜக கூட்டம்: ஹிமாச்சல முதல்வரை அறிவிக்க வாய்ப்பு!

பாஜக ஆலோசனைக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில், ஹிமாச்சலப் பிரதேசத்தின் அடுத்த முதல்வரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளை பாஜக கூட்டம்: ஹிமாச்சல முதல்வரை அறிவிக்க வாய்ப்பு!

ஹிமாச்சலப் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் 44 இடங்களில் பாஜக வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.

இருப்பினும் இந்த தேர்தலின் போது அக்கட்சி தரப்பில் அம்மாநிலத்துக்கான முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரேம் குமார் தோமர் தோல்வியைத் தழுவினார். எனவே அங்கு முதல்வரைத் தேர்வு செய்வது தொடர்பாக குழப்பம் நீடிக்கிறது.

இந்நிலையில், பாஜக ஆலோசனைக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அம்மாநிலத்துக்கான முதல்வரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக கடந்த 2 தினங்களாக அங்கு முகாமிட்டிருந்த பாஜக முக்கியத் தலைவர்களான நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர் மற்றும் மங்கள் பாண்டே உள்ளிட்டோர் அம்மாநில நிலவரங்கள் தொடர்பான அறிக்கையை தில்லி திரும்பிய பின்னர் பாஜக தலைவர் அமித்ஷாவிடம் வழங்கியுள்ளனர்.

இதில், ஹிமாச்சலப் பிரதேசத்தின் அடுத்த முதல்வராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, 5 முறை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள ஜெய்ராம் தாக்கூர், சுரேஷ் பரத்வராஜ், ராஜீவ் பிந்தால் உள்ளிட்டோர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இந்த தேர்தலின் போது தோல்வியுற்ற முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் தோமர் தேர்வுசெய்யப்படவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் கட்சித் தலைமையின் முடிவு இறுதியானது என்று அம்மாநில மூத்த பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com