தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாலிவுட் ஹீரோக்களை 'வாரிய' பாகிஸ்தான் நடிகை!

பாகிஸ்தானிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு நடிகை ஒருவர் பிரபல பாலிவுட் கதாநாயகர்களை கிண்டல் செய்து கருத்து கூறிய சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாலிவுட் ஹீரோக்களை 'வாரிய' பாகிஸ்தான் நடிகை!

மும்பை: பாகிஸ்தானிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு நடிகை ஒருவர் பிரபல பாலிவுட் கதாநாயகர்களை கிண்டல் செய்து கருத்து கூறிய சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பாகிஸ்தானைச் சேர்த்த நடிகை சபா கிமார்.இவர் பாலிவுட் நடிகர் இர்பான் கானுடன் இணைந்து நடித்துள்ள 'ஹிந்தி மீடியம்' என்ற திரைப்படசத்தின் மூலம் பாலிவுட்டில் விரைவில் அறிமுகமாக உள்ளார். இந்நிலையில்  பாகிஸ்தானிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இவர் பிரபல பாலிவுட் கதாநாயகர்களை கிண்டல் செய்து கருத்து கூறிய சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

'குட் மார்னிங் ஜிந்தகி' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த நிகழ்ச்சியில் சபா  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்வில் அவர் தனக்கு காண்பிக்கப்படும் புகைப்படங்களில் உள்ள  பாலிவுட்  நடிகர்கள் தொடர்பான கற்பனை கேள்விகளுக்கு ஆமாம் அல்லது இல்லை என்று பதில் அளிப்பதுடன் அதற்கான காரணத்தையும் கூற வேண்டும்.  அதன்படி நடிகர்களின் படங்களை காண்பித்து இவரை திருமணம் செய்ய முடியுமா என்று சபாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதில் ஹ்ரித்திக் ரோஷன் படத்தை காண்பித்து கேட்ட பொழுது இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான இவரை திருமணம் செய்ய முடியாது என்று சபா பதில் கொடுத்தார். அதே போல் முத்தக் காட்சிகளில் புகழ் பெற்ற இம்ரான் ஹாஸ்மி படத்திற்கு எனக்கு வாய் புற்று நோய் வரவைக்க விருப்பமில்லை என்று கூறினார். பின்னர் ரிதேஷ் தேஷ்முக்கின் படம் காண்பிக்கப்பட்ட பொழுது பாகிஸ்தானில் நான் ஒரு முன்னணி நடிகை எனவே அங்கேயும் ஒரு முன்னணி நடிகரைத்தான் விரும்புவேன் என்று கூறி மறுத்தார். 

பிறகு ரன்பீர் கபூரின் புகைப்படம் காண்பிக்கப்பட்ட பொழுது முதலில் சம்மதித்தவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் வற்புறுத்திக் கேட்ட பொழுது அவர் இந்திய நடிகை  தீபிகா படுகோனுடன் தொடர்பு வைத்திருப்பதால் அவரும் வேண்டாம் என்று மறுத்தார்.   

இறுதியாக நடிகர் சல்மான் கானின் படம் காட்டப்பட்ட பொழுது எப்படிநடனம் ஆடுவது என்றே தெரியாதவர், மரியாதைக்கு குறைவானவர் என்றெல்லாம் கூறி மறுத்தார்.

சபாவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com