ஜூன் 18-இல் ஐஏஸ், ஐபிஎஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 18-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுதில்லி: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 18-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஆகஸ்ட் மாதம் நடைபெறும் குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வானது, இந்த ஆண்டு முன்கூட்டியே நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். ஆகிய ஆட்சிப் பணிகளுக்காக ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த தேர்வானது முதல்நிலை, முதன்மை, நேர்முகம் என மூன்று கட்டங்களாக நடைபெறும்.
அந்த வகையில், 2017-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வு, வரும் ஜூன் மாதம் 18-ஆம் தேதி நடைபெறும் என மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் அறிவித்துள்ளது. பொதுவாக, இந்த முதல்நிலைத் தேர்வானது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு சற்று முன்கூட்டியே இந்த தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 21 வயதுக்கு குறையாமலும், 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதில், அதிகபட்ச வயதானது சில குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்த்தப்படும். தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மார்ச் 17 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.upsc.gov.in  அல்லது http://www.upsc.gov.in/sites/default/files/Engl_CSP_2017.pdf என்ற அறிவிப்பு லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com