கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாத தொழிற்சாலைகளை மூட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

""கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை 3 மாதங்களில் அமைக்காத தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும்'' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாத தொழிற்சாலைகளை மூட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

""கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை 3 மாதங்களில் அமைக்காத தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும்'' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீர்நிலைகளில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்காக, உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை புதன்கிழமை பிறப்பித்தது.
இதுதொடர்பாக, தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
அனைத்து தொழிற்சாலைகளிலும் சட்ட விதிகளுக்கு உள்பட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதா எனக் கேட்டு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். 3 மாத அவகாசத்துக்குப் பிறகு, அனைத்து தொழிற்சாலைகளிலும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
அந்த ஆய்வின்போது, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படாத தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதி வழங்கக் கூடாது. அந்தத் தொழிற்சாலைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்ட பிறகே தொழிற்சாலைகளை இயக்குவதற்கு அனுமதியளிக்க வேண்டும்.
மேலும், சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளின் மின் இணைப்பை துண்டிக்குமாறு மின்சார வாரியம் அல்லது மின் பகிர்மான நிறுவனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட
வேண்டும்.
இதேபோல், ஊராட்சி அல்லது நகராட்சி நிர்வாகங்களும், நிலம் பெறப்பட்ட மூன்று ஆண்டுகளில் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டும். நிதி தட்டுப்பாடு ஏற்பட்டால், பயனாளிகளிடம் இருந்து நகராட்சி நிர்வாகம் வரி வசூலிக்கலாம் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.
முன்னதாக, நீர்நிலைகள் மாசுபடுவதைத் தடுப்பது தொடர்பாக, மத்திய அரசு, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், குஜராத் உள்ளிட்ட 19 மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com