மணிப்பூர்: முதன்முறையாக முஸ்லிம் பெண் தேர்தலில் போட்டி

மணிப்பூர் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் முதல் முறையாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் போட்டியிடுகிறார். முஸ்லிம் மதத் தலைவர்களின் தடை (ஃபத்வா) உத்தரவையும் மீறி, மணிப்பூரில் உள்ள வப்காய் சட்டப் பேரவைத் தொகுதியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
மணிப்பூர்: முதன்முறையாக முஸ்லிம் பெண் தேர்தலில் போட்டி

மணிப்பூர் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் முதல் முறையாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் போட்டியிடுகிறார். முஸ்லிம் மதத் தலைவர்களின் தடை (ஃபத்வா) உத்தரவையும் மீறி, மணிப்பூரில் உள்ள வப்காய் சட்டப் பேரவைத் தொகுதியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அவருடன் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் உள்பட 6 பேர் போட்டியிடுகின்றனர்.
நஜீமா பீவி என்ற அந்தப் பெண் வேட்பாளர், இரோம் ஷர்மிளாவின் புதிய அரசியல் கட்சியான "மக்கள் எழுச்சி நீதிக் கூட்டணி' சார்பில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், தனது அரசியல் பிரவேசம் குறித்து நஜீமா பீவி, புதன்கிழமை கூறியிருப்பதாவது:
எனது வாழ்வைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனது மூச்சு இருக்கும் வரை, சமூகத்தில் முஸ்லிம் பெண்களின் நிலையை மேம்படுத்தவும், குடும்ப வன்முறைக்கு எதிராகவும் எனது போராட்டம் தொடரும். குழந்தைப் பருவத்திலிருந்தே போராட்டங்களை சந்தித்து வருவதால், அச்சுறுத்தல்களைக் கண்டு அஞ்ச மாட்டேன்.
மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு எதிராக 16 ஆண்டுகள் வரை இரோம் சர்மிளா நடத்திய போராட்டம், இந்த மாநில பெண்கள் எவ்வளவு உறுதியோடு இருக்கிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணம். அவரது போராட்டக் குணத்தால் ஈர்க்கப்பட்ட நான், அவர் அரசியல் கட்சி தொடங்கியபோது அவருடன் இணைந்து பணியாற்றி முடிவு செய்தேன்.
கடந்த 2001-ஆம் ஆண்டு நான் பங்கேற்ற பெண்ணுரிமை தொடர்பான கருத்தரங்கம், எனது வாழ்க்கைப் பாதையை மாற்றிவிட்டது. அப்போதே, பெண்கள் யாரும் துன்புறுத்தல்களுக்கும், வன்முறைக்கும் ஆளாகக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் உதவுவதற்கு முடிவு செய்தேன்.
ஆனால், 2006-ஆம் ஆண்டில் முஸ்லிம் மதத் தலைவர்கள் எனக்கு எதிராக ஃபத்வா உத்தரவு பிறப்பித்தனர். பெண்களின் சமூக மேம்பாடு மட்டுமே எனது லட்சியமாக இருந்ததால், மற்ற பிரச்னைகள் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
தேர்தலில் நான் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும், எனது பணிகளை யாராலும் தடுக்க முடியாது என்றார் நஜீமா பீவி.
40 வயதைக் கடந்துவிட்ட நஜீமா பீவி, ஆதரவற்ற பெண்களுக்கான இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார். தினமும் சைக்கிளில் சென்று தொகுதி மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com