சட்லஜ்-யமுனை கால்வாய் விவகாரம்: பஞ்சாபுக்குள் நுழைய முயன்ற அபய் சௌதாலா கைது

சட்லஜ்-யமுனை இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்காக பள்ளம் வெட்டும் பணிகளை பஞ்சாப் அரசு தொடங்க வேண்டும் என்று

சட்லஜ்-யமுனை இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்காக பள்ளம் வெட்டும் பணிகளை பஞ்சாப் அரசு தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஹரியாணாவில் இருந்து பஞ்சாபுக்குள் நுழைய முயன்ற இந்திய தேசிய லோக்தளக் கட்சித் தலைவர் அபய் சௌதாலா உள்ளிட்டோர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ராவி, பியாஸ், சட்லஜ் ஆகிய மூன்று நதிகளின் நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக பஞ்சாபுக்கும், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் இடையே கடந்த 1981-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது தவிர, தில்லி, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு இந்த நதிகளின் நீரைப் பகிர்ந்து கொள்ளவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த நீர்ப் பகிர்வை மேற்கொள்ள 2 ஆண்டுகளுக்குள் 214 கி.மீ. நீள சட்லஜ்-யமுனை இணைப்புக் கால்வாயை பஞ்சாப் அமைக்க வேண்டும் என்பது அந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும்.
எனினும், இந்தக் கால்வாயை அமைத்தால் தனக்கான நீரின் அளவு குறையும் என்று கருதிய பஞ்சாப் அரசு இதுவரை கால்வாய்த் திட்டப் பணிகளை நிறைவேற்றவில்லை. இது தொடர்பாக பஞ்சாபுக்கும் ஹரியாணாவுக்கும் இடையே தகராறு நீடிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் இரு தரப்புக்கு இடையிலான வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சட்லஜ்-யமுனை இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்காக பள்ளம் வெட்டும் பணிகளை பஞ்சாப் அரசு தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஹரியாணாவைச் சேர்ந்த இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) கட்சித் தலைவர் அபய் சௌதாலா உள்ளிட்டோர் பஞ்சாபுக்குள் வியாழக்கிழமை நுழைய முயற்சி மேற்கொண்டனர். அவர்களில் அக்கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளும் அடங்குவர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் அத்துமீறி நுழைந்த காரணத்துக்காக அவர்களை ஹரியாணா-பஞ்சாப் எல்லையில் அமைந்துள்ள ஷம்பு பகுதியில் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இது தொடர்பாக பஞ்சாப் காவல்துறை டிஐஜி (பாட்டியாலா மண்டலம்) ஆசிஷ் சௌ
தரி, "தடை உத்தரவை மீறியதற்காக அவர்களை நாங்கள் கைது செய்தோம். அபய் சௌதாலா உள்பட ஐஎன்எல்டி கட்சியைச் சேர்ந்த 73 பேர் கைது செய்யப்பட்டனர்' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com