பாஜகவுடன் பகுஜன் சமாஜ் உடன்பாடு எட்ட வாய்ப்பு: அகிலேஷ்

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின், பாஜகவுக்கு உதவி புரியும் நோக்கில் அக்கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது என்று அந்த மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
பாஜகவுடன் பகுஜன் சமாஜ் உடன்பாடு எட்ட வாய்ப்பு: அகிலேஷ்

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின், பாஜகவுக்கு உதவி புரியும் நோக்கில் அக்கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது என்று அந்த மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, சித்தார்த்நகரில் அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
மக்களை பாஜக தவறாக வழிநடத்தி வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சியிடமும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனென்றால், அக்கட்சித் தலைவர் (மாயாவதி) பாஜகவுடன் எப்போது வேண்டுமானாலும் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வார்.
உண்மையில், பாஜகவுக்கு அவர் உதவி புரிந்து வருகிறார். பாஜக மூத்த தலைவர்களுக்கு ராக்கி கயிற்றை மாயாவதி ஏற்கெனவே கட்டியிருக்கிறார்.
எனவே, அவர் ரக்ஷா பந்தன் விழாவை மீண்டும் கொண்டாடி சகோதர பாசத்தை வெளிப்படுத்தினாலும் வெளிப்படுத்துவார் என்றார் அகிலேஷ். உத்தரப் பிரதேசத்தில் காவல் நிலையங்கள் அனைத்தும் சமாஜவாதி கட்சிப் பிரமுகர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளித்தார்.
அதுகுறித்து அகிலேஷ் பேசியதாவது:
"உ.பி.100' திட்டம் குறித்து பிரதமர் மோடி அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். முன்பெல்லாம் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க முற்படும்போது தொலைபேசியை காவலர்கள் எடுப்பதில்லை என்று புகார்கள் வந்தன. தற்போது "100' என்ற எண்ணிற்கு அழைத்து புகாரைப் பதிவு செய்தால் அடுத்த 10 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
எனது ஆட்சிக்காலத்தில் காவலர்கள் அதிகம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பலருக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது என்றார் அகிலேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com