மத்திய பட்ஜெட்டை தள்ளி வைக்க கோரும் மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

விரைவில் நடைபெற இருக்கும் ஐந்து மாநில தேர்தலை மனதில் கொண்டு மத்திய பட்ஜெட்டை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிய மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
மத்திய பட்ஜெட்டை தள்ளி வைக்க கோரும் மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுதில்லி: விரைவில் நடைபெற இருக்கும் ஐந்து மாநில தேர்தலை மனதில் கொண்டு மத்திய பட்ஜெட்டை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிய மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

தில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவில் அவர் வரும் பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை ஐந்து மாநிலங் களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. அந்த நேரத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தால் அது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாக இருக்கும். எனவே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதை ஏப்ரல் மாதம் வரை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவானது தலைமை நீதிபதி ஜே .எஸ்.கேஹர், நீதிபதிகள் ஏன்.வி.ரமணா மற்றும் டி.ஒய் சந்திரசூட் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. ஆனால் இதனை அவசர வழக்காக கருதி விசாரிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு சாதாரணமாக விசாரணைக்கு வரும் போது விசாரிப்பதாக கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com