நர்மதையை தேம்ஸ் நதிபோல் ஆக்குவோம்: சத்யார்த்தி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாயும் புனித நதியான நர்மதை நதியை அசுத்தத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவரும் ஒன்றுபட்டு அந்த நதியை தேம்ஸ் நதிபோல தூய்மையாக்குவோம் என்று நோபல் பரிசு
நர்மதையை தேம்ஸ் நதிபோல் ஆக்குவோம்: சத்யார்த்தி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாயும் புனித நதியான நர்மதை நதியை அசுத்தத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவரும் ஒன்றுபட்டு அந்த நதியை தேம்ஸ் நதிபோல தூய்மையாக்குவோம் என்று நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பாயும் இந்த நதி நாளுக்கு நாள் அசுத்தப்பட்டு வருகிறது. இதைக் காப்பதற்காக "நர்மதையைக் காப்போம்' திட்டத்தின் 30-ஆவது நாள் யாத்திரை போபாலில் ஹோஷங்காபாத் மாவட்டம், உமர்தா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட கைலாஷ் வித்யார்த்தி பேசியதாவது:
நர்மதை அசுத்தமடைவது தொடர்பான விவகாரத்தை ஜாதி, மதம் கடந்து அனைத்து மக்களும் ஒருமித்தக் குரலில் எழுப்பும்போது புதிய கலாசாரம் உருவாகிறது. புனித நதியான நர்மதையைப் பாதுகாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த யாத்திரையின் நோக்கமே புதிய வரலாற்றை படைப்பது ஆகும்.
முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் இந்த யாத்திரையை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளும் லண்டனில் உள்ள தேம்ஸ் நதியைப் போலவும், ஜெர்மனியில் உள்ள ரைனே நதியைப் போலவும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது கனவாகும். நர்மதை நதியை தூய்மைப்படுத்துவதன் மூலம் எனது கனவு நனவாகும். சமூகமும், அரசும் இணைந்து செயலாற்றினால்தான் நிரந்தரமான மாற்றங்கள் நிகழும்.
இன்றைய காலகட்டத்தில் உலகில் பல்வேறு நாடுகளுக்கிடையே ஏற்படும் மோதலுக்கு காரணம் நீர். நர்மதை நதி தூய்மையானால் அனைவரும் பயனடைவர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com