இன்று இந்திய ராணுவ தினம்: பிரதமர் மோடி வாழ்த்து 

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், மதிப்பிட முடியாத சேவைக்கும் தலை வணங்குவதாக இந்திய ராணுவ தின  வாழ்த்து செய்தியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
இன்று இந்திய ராணுவ தினம்: பிரதமர் மோடி வாழ்த்து 

புதுதில்லி: இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், மதிப்பிட முடியாத சேவைக்கும் தலை வணங்குவதாக இந்திய ராணுவ தின  வாழ்த்து செய்தியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

நாடு விடுதலை பெற்ற பின்பு 1949 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல் லெப்டினன்ட் ஜெனரலாக கே.எம்.கரியப்பா பதவியேற்றார். நமது இந்திய ராணுவத்துக்கு ஒரு இந்தியரே தலைமைப் பொறுப்பேற்ற தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15-ம் தேதி ராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தாய்நாட்டுக்காக ரத்தம் சிந்தி தங்கள் இன்னுயிரை தியாகம் செய்யும் நமது சரித்திர நாயகர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளாகவும் ராணுவ தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராணுவ தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது:

நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதிலும் சரி, பேரிடர் காலத்தில் நாட்டு மக்களுக்கு உதவி செய்வதிலும் சரி, இந்திய ராணுவம் எப்போதுமே முதலிடத்தில் நின்று தலைமை தாங்கி வருகிறது. 125 கோடி இந்தியர்கள் அமைதியாக வாழ தங்களது இன்னுயிரை துச்சம் என மதித்து ராணுவ வீரர்கள் சேவையாற்றி வருகின்றனர். அவர்களின் அனைத்து வகை தியாகங்களையும் பெருமிதத்துடன் நினைவுகூரும் இந்நாளில், இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், மதிப்பிட முடியாத சேவைக்கும் தலை வணங்குகிறோம்.

தற்போது பணியில் உள்ள வீரர்கள், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு இனிய ராணுவ தின நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் மோடி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com