மத்திய பட்ஜெட்டை ஒத்திவைக்க கோரும் மனு மீது ஜன.23-இல் விசாரணை

எதிர்வரும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை கருத்தில் கொண்டு, மத்திய பட்ஜெட்டை தள்ளிவைக்கக் கோரும் பொது நல மனு மீதான விசாரணையை, உச்ச நீதிமன்றம் வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
மத்திய பட்ஜெட்டை ஒத்திவைக்க கோரும் மனு மீது ஜன.23-இல் விசாரணை

எதிர்வரும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை கருத்தில் கொண்டு, மத்திய பட்ஜெட்டை தள்ளிவைக்கக் கோரும் பொது நல மனு மீதான விசாரணையை, உச்ச நீதிமன்றம் வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
2017-18ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, பிப்.1-ஆம் தேதி தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான பேரவைத் தேர்தல் தேதிகள், கடந்த 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. அதன்படி, பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்கி மார்ச் 8-ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், 5 மாநிலத் தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய பட்ஜெட்டை ஒத்திவைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் எம்.எல்.சர்மா என்ற வழக்குரைஞர் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "தேர்தல் விதிமீறல் என்பதால், 5 மாநில தேர்தல் முடிவடையும் வரை பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு மத்திய அரசை அனுமதிக்கக் கூடாது' என்று கோரப்பட்டுள்ளது.
அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது, பொது நல மனுவுக்கு ஆதரவாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யும்படி மனுதாரரை அறிவுறுத்திய நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com