மோடி எங்களை சந்திக்காதது மன உறுத்தலை ஏற்படுத்துகிறது: தம்பிதுரை வேதனை

தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச வந்த தங்களை, பிரதமர் மோடி சந்திக்காதது மன உறுத்தலை ஏற்படுத்துவதாக மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை கூறினார்.
மோடி எங்களை சந்திக்காதது மன உறுத்தலை ஏற்படுத்துகிறது: தம்பிதுரை வேதனை


புது தில்லி: தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச வந்த தங்களை, பிரதமர் மோடி சந்திக்காதது மன உறுத்தலை ஏற்படுத்துவதாக மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை கூறினார்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு கோரி, அதிமுக எம்.பி.க்கள் இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, இன்றே ஜல்லிக்கட்டுக்காக  அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என கூறினார்.

மேலும் பேசிய அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களை சந்திக்க வேண்டியது மோடியின் கடமை. அவர் பிரதமர் என்றால், நான் மக்களவைத் துணைத் தலைவர். அனைவருமே மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள். மக்கள் பிரச்னையை மத்திய அரசிடம் நாங்கள் கொண்டு  செல்கிறோம். ஆனால், மோடி எங்களை சந்திக்கவில்லை.

பல்வேறு பிரச்னைக்காக மோடியை சந்திக்க முயன்றும் முடியவில்லை. காவிரி பிரச்னைக்காக, கட்சிப் பிரச்னைக்காக என எத்தனையோ பிரச்னைகளுக்காக சந்திக்க வந்தோம். ஆனால், அவர் நேரம் ஒதுக்கவில்லை. இதனால் மன உறுத்தல் இருக்கிறது.

இருந்தாலும் அவசரச் சட்டம் இயற்ற பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற பிரச்னைக்காக எப்போது வந்தாலும் உடனடியாக உதவுமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com