உ.பி. அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

உத்தரப் பிரதேசத்தில் வாக்காளர்களுக்கு 4,000 புடவைகள் அளிக்க திட்டமிட்டிருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, அதுதொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி மாநில அமைச்சர் காயத்ரி பிரசாத் பிரஜாபதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஃபதேபூர் மாவட்ட ஆட்சியர், காவல் துறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
நோட்டீஸýக்கு வரும் திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வழக்கமான வாகன சோதனையில் கடந்த 11-ஆம் தேதி அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு லாரியை இடைமறித்து சோதனையிட்டபோது அதில் 4,452 புடவைகள் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. விசாரித்ததில் அவை அனைத்தும் காயத்ரி பிரசாத் பிரஜாபதிக்கு அளிப்பதற்காகக் கொண்டு செல்லப்படுவதாக லாரி ஓட்டுநர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com