டிரம்ப் - புதின் இணைந்து செயல்பட வேண்டும்

உலகில் அமையை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று திபெத்திய பெளத்த மதத் தலைவர் தலாய் லாமா வலியுறுத்தியுள்ளார்.
டிரம்ப் - புதின் இணைந்து செயல்பட வேண்டும்

உலகில் அமையை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று திபெத்திய பெளத்த மதத் தலைவர் தலாய் லாமா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பேசியதாவது:
ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒரே நாடுபோல் செயல்படும் ஐரோப்பிய யூனியன் அமைப்பு மிகவும் பாராட்டுக்குரியது.
அதேபோல், ஆப்பிரிக்க யூனியன், லத்தீன் அமெரிக்க யூனியன், ஆசிய யூனியன், இன்னும் ஒருபடி மேலே போய், உலகம் முழுவதும் ஒரே நாடு என்ற நிலை வரவேண்டும்.
நாடுகள் தங்களிடையேயான பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு படைபலத்தைப் பயன்படுத்திய காலம் மலையேறிவிட்டது.
பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நூற்றாண்டு இது.
உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் பேச்சுவார்த்தை மூலம் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.
பெண் தலாய் லாமா: பெண்களிடம் இயற்கையிலேயே கருணையுள்ளம் அமைந்துள்ளதால் தலைமைப் பதவிக்கு ஆண்களை விட அவர்களே மிகவும் ஏற்றவர்கள்.
என்னிடம் சிலர் "ஒரு பெண் தலாய் லாமா (திபெத்திய பெளத்த மதத் தலைவர்) ஆக முடியுமா?' என்று கேட்கிறார்கள்.
அதற்கு என் பதில், "ஏன் ஆக முடியாது?' என்பதுதான்.
சந்தர்ப்ப சூழ்நிலை சரியாக அமைந்தால், அடுத்த தலாய் லாமாவாக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com