அரசியல் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள அகிலேஷின் தயவை நாடுகிறார் ராகுல்: பாஜக

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, சமாஜவாதி போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது'' என்று பாஜக
அரசியல் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள அகிலேஷின் தயவை நாடுகிறார் ராகுல்: பாஜக

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, சமாஜவாதி போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது'' என்று பாஜக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக, தில்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, திங்கள்கிழமை கூறியதாவது: உத்தரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்காக, சமாஜவாதிக் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது. ராகுல் காந்தி தனது அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, முதல்வர் அகிலேஷ் யாதவ் போன்றவர்களின் உதவியை நாடியிருப்பதையே, இது காட்டுகிறது.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இந்த நேரத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ், தேர்தல் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக இருக்கிறார் என்றார் அவர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, ஆளும் சமாஜவாதிக் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு கட்சிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில், சமாஜவாதிக் கட்சி 298 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 105 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com