பட்ஜெட்: தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் புதிய அறிவிப்புகள் கூடாது

மத்திய அரசு தாக்கல் செய்யும் பொது பட்ஜெட்டில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு புதிய அறிவிப்புகள் ஏதும் இருக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது.

மத்திய அரசு தாக்கல் செய்யும் பொது பட்ஜெட்டில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு புதிய அறிவிப்புகள் ஏதும் இருக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது.
பொது பட்ஜெட்டை திட்டமிட்டபடி, வரும் பிப்ரவரி 1-ஆம் தேதியன்று தாக்கல் செய்வதற்கு தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை இரவு ஒப்புதல் அளித்தது. எனினும், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்கள் தொடர்புடைய எந்தவொரு திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய அமைச்சரவைச் செயலர் பி.கே.சின்ஹா கூறியதாவது:
5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலை நியாயமாக நடத்துவதற்காக, தேர்தல் ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பிக்கிறது. மத்திய அரசு தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட்டில், தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்கள் தொடர்பான திட்டம் எதுவும் இடம்பெறக் கூடாது. ஏனெனில், இவ்வாறான அறிவிப்புகளால், வாக்காளர்கள் கவரப்பட்டு, அந்த மாநிலங்களில் ஆளும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துவிடும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக பி.கே.சின்ஹா கூறினார்.
இதுதவிர, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில், மத்திய அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்த சாதனை விளக்கம் எதுவும் மத்திய நிதியமைச்சரின் பட்ஜெட் உரையில் இடம்பெறக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தகரண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில், சட்டப்பேரவைத் தேர்தல், அடுத்த மாதம் 4-ஆம் தேதி தொடங்கி, மார்ச் 8-ஆம் தேதி வரை பல கட்டங்களாக நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com