அதிகாரியை மாற்றா விட்டால் பதவியை ராஜிநாமா செய்து விடுவேன்: முதல்வருக்கு கெடு விதித்துள்ள அமைச்சர்! 

தான் குறிப்பிட்டுள்ள மாவட்ட அதிகாரியை மாற்றா விட்டால், தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்து விடுவேன் என்று உத்தரபிரதேச முதல்வருக்கு, மாநில அமைச்சர் ஒருவர் கெடு விதித்துள்ள... 
அதிகாரியை மாற்றா விட்டால் பதவியை ராஜிநாமா செய்து விடுவேன்: முதல்வருக்கு கெடு விதித்துள்ள அமைச்சர்! 

லக்னோ: தான் குறிப்பிட்டுள்ள மாவட்ட அதிகாரியை மாற்றா விட்டால், தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்து விடுவேன் என்று உத்தரபிரதேச முதல்வருக்கு, மாநில அமைச்சர் ஒருவர் கெடு விதித்துள்ள விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர். ஜாஹூராபாத் தொகுதியில் இருந்து தேர்தெடுக்கப்பட்டுள்ள இவர், பாஜகவின் கூட்டணிக் கட்சியான சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராவார்.

இவர் தற்பொழுது காசிப்பூர் மாவட்ட நீதிபதியான சஞ்சய் குமார் தாத்ரி என்பவரை இன்று மாலைக்குள் இடமாற்றம் செய்ய வேண்டுமெனவும், அவ்வாறு இல்லா விட்டால், நாளை (செவ்வாய்க்கிழமை) தான் நேரடியாக காசிப்பூர் சென்று அங்கு தர்ணா போராட்டடத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர்  அளித்துள்ள பேட்டி விபரம் வருமாறு:

எங்களது கட்சி நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்த தொகுதிகளின் மக்கள் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்காக என்னை அணுகுகின்றனர். அவர்களது பல நியாயமான கோரிக்கைகளுக்காக காசிப்பூர்  மாவட்ட நீதிபதியான தாத்ரியை அணுகினால், அவர் அது குறித்து காது கொடுத்து கேட்பதும் இல்லை; நடவடிக்கைகள் எடுப்பதும் இல்லை. எனவே இத்தகைய நடவடிக்கைளை என்னால் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

இது தொடர்பாக முதலவர் ஆதித்யநாத்தை கடந்த 27-ஆம் தேதியன்று சந்தித்தேன். தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தரப்பில் இருந்து உறுதியளிக்கப்பட்டது. ஆனால்; இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே திங்கள்கிழமை மாலைக்குள் நடவடிக்கை எடுத்து, தாத்ரி அங்கிருந்து நீக்கப்படாவிட்டால், நான் நேரடியாக காசிப்பூர் சென்று தர்ணாவில் ஈடுபடுவேன்.

இவ்வாறு அமைச்சர் ராஜ்பர் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com