இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி பொறுப்பேற்பு! 

இந்தியாவின் 21-ஆவது தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி இன்று தில்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி பொறுப்பேற்பு! 

புதுதில்லி:  இந்தியாவின் 21-ஆவது தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி இன்று தில்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த நஜீம் சைதியின் பதவிக்காலம் இன்றோடு முடிவடைவதால், இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமனம் செய்யப்படுவதாக, கடந்த செவ்வாய் அன்று மத்திய சட்டத்துறை அறிவிப்பு வெளியிட்டது.

குஜராத் மாநிலத்தினைச் சேர்ந்த அச்சில் குமார் ஜோதி, 1975-ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணிக்கு தேர்வானவராவார். இவர் குஜராத் மாநிலத் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவராவார். பதவியேற்ற இன்றிலிருந்து அவர் எட்டு மாதங்களுக்கு இந்த பதவியிலிருப்பார் என்று தெரிகிறது

பதவியேற்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜோதி, 'வழக்கம் போல இந்தியாவில் எல்லா தேர்தல்களையும் நேர்மையாக, சுதந்திரமாக, நம்பிக்கைக்குரிய முறையில் அனைவரையும் ஒன்றிணைத்து நடத்த தேர்தல் ஆணையம் பாடுபடும்' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com