இந்து-முஸ்லிம்  தம்பதி என்பதால் ஹோட்டல் அறை வழங்கப்படவில்லையா? பெங்களூருவில் சர்ச்சை

பெங்களூருவில் இந்து - முஸ்லிம் தம்பதி என்பதால் தங்களுக்கு ஹோட்டல் அறை வழங்கப்படவில்லை என்று கேரளாவைச் சேர்ந்த தம்பதி குற்றம்சாட்டியுள்ளனர்.
courtesy : facebook
courtesy : facebook


கோழிக்கோடு: பெங்களூருவில் இந்து - முஸ்லிம் தம்பதி என்பதால் தங்களுக்கு ஹோட்டல் அறை வழங்கப்படவில்லை என்று கேரளாவைச் சேர்ந்த தம்பதி குற்றம்சாட்டியுள்ளனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷஃபீக் சுபைதா ஹக்கீம் - டி.வி. திவ்யா தம்பதியினர் இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள தேசிய சட்டப் பள்ளியில் நடந்த நேர்காணலில் திவ்யா பங்கேற்க வேண்டி இருந்ததால் கேரளாவில் இருந்து பெங்களூரு வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து ஷஃபீக் கூறுகையில், பெங்களுரு வந்து சேர்ந்ததும் அங்கிருந்த தனியார் ஹோட்டலுக்குச் சென்றோம். நான் முஸ்லிம், மனைவி இந்து என்பதால், எங்களுக்கு அறை கொடுக்க மறுத்துவிட்டார்கள்.

இந்துவும் முஸ்லிமும் ஒரே அறையில் தங்குவதற்கு, அனுமதிக்க முடியாது என்று அந்த ஹோட்டலின் வரவேற்பாளர் கூறிவிட்டார். நாங்கள் திருமணத்துக்கான சாட்சியை அளித்தும் கூட எங்களுக்கு அறை மறுக்கப்பட்டது என்கிறார்.

ஹோட்டலில் அறை கொடுக்க மறுக்கப்பட்டதால், நாங்கள் அங்கிருந்து நேர்காணலுக்குச் சென்றுவிட்டு, அன்றைய தினமே கோழிக்கோடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார்.

எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லுரியில் திவ்யா பிஎச்.டி. படித்து வருகிறார்.

இது குறித்து ஹோட்டல் நிர்வாகம் கூறிய விளக்கத்தில், இது நிச்சயம் மத அடிப்படையிலான விஷயமே இல்லை. அந்த தம்பதியினர் ஒருசில மணி நேரத்துக்கு தான் அறை கேட்டனர். ஆனால் அவர்களிடம் எந்த உடமைகளும் இல்லாததால் அறை கொடுக்க மறுத்துவிட்டோம். அவ்வளவுதான் என்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com