ஜிஎஸ்டி பற்றிய உங்கள் குழப்பங்களுக்கு தீர்வு காண வந்துவிட்டது ஜிஎஸ்டி மொபைல் ஆப்!

பல பொருட்களின் விலை உயர்வுக்கு அஸ்திவாரமிட்ட ஜிஎஸ்டி குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைப் போக்க ஜிஎஸ்டி ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி பற்றிய உங்கள் குழப்பங்களுக்கு தீர்வு காண வந்துவிட்டது ஜிஎஸ்டி மொபைல் ஆப்!


புது தில்லி : பல பொருட்களின் விலை உயர்வுக்கு அஸ்திவாரமிட்ட ஜிஎஸ்டி குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைப் போக்க ஜிஎஸ்டி ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இட்லி விலை முதல் சினிமா டிக்கெட் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. பல பொருட்களுக்கு விலை குறையும் என்றார்கள். ஆனால், இதுவரை எந்த பொருளின் விலையும் குறைக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை.

ஜிஎஸ்டியின் வரவால் தண்ணீர் கேன் முதல் செல்போன் ரீசார்ஜ் வரை விலை உயர்ந்திருப்பதால், நடுத்தர மக்களின் இந்த மாத பட்ஜெட்டில் மிகப்பெரிய துண்டு விழுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி தொடர்பான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் தீர்வு காணும் வகையில், மத்திய அரசும், மத்திய சுங்கம் மற்றும் கலால்துறை வாரியம் சார்பில் செல்போன் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைக்கு இது ஆன்டிராய்ட் செல்போன்களில் செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஐஓஎஸ் பயனாளர்களும் பயன்படுத்தும் வகையில் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப்-பில், எந்தவொரு பொருளின் ஜிஎஸ்டி வரியை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களோ, அந்த பொருளின் அல்லது சேவையின் பெயரை பதிவு செய்தால், அது பற்றிய விளக்கம் தெரிய வரும்.

மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த 'ஜிஎஸ்டி ரேட்ஸ் ஃபைண்டர்' (GST Rates Finder) என்ற மொபைல் ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எந்த ஸ்மார்ட்போன்களிலும் இந்த மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், இது ஆஃப்லைன் மோடிலும் (இணைய வசதி இல்லாவிட்டாலும்) செயல்படும் என்றும் மத்திய அமைச்சகம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்த மொபைல் ஆப், வரி செலுத்துவோருக்கானது மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமக்களுக்குமானதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதைத் தவிர, மத்திய சுங்கம் மற்றும் கலால்துறை வாரியத்தின் இணையதளத்திலும் (http://cbec-gst.gov.in), வியாபாரிகள் தங்களது பொருட்களுக்கா ஜிஎஸ்டி வரி குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com