ஜிஎஸ்டி: புதிய விலையை அச்சிடாதவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதத்துடன் சிறை: மத்திய அமைச்சர் பாஸ்வான் எச்சரிக்கை

ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குப் பிறகு அனைத்து விற்பனை பொருள்களிலும் புதிய அதிகபட்ச சில்லறை விலையை (எம்ஆர்பி) அச்சிடாதவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதத்துடன் சிறை தண்டனையும்
ஜிஎஸ்டி: புதிய விலையை அச்சிடாதவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதத்துடன் சிறை: மத்திய அமைச்சர் பாஸ்வான் எச்சரிக்கை

ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குப் பிறகு அனைத்து விற்பனை பொருள்களிலும் புதிய அதிகபட்ச சில்லறை விலையை (எம்ஆர்பி) அச்சிடாதவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் எச்சரிக்கை விடுத்தார்.
நாடு முழுவதுவம் ஜூலை 1- ஆம் தேதி முதல் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது.
இதன்காரணமாக, சில பொருள்களின் விலை உயர்ந்தும், சில பொருள்களின் விலை குறைந்தும் உள்ளன.
ஆனால், கடைகளில் ஜிஎஸ்டி அமலுக்கு முன்பு அச்சிடப்பட்டிருந்த பழைய எம்ஆர்பி விலைக்கே பல பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், அந்தத் துறை அமைச்சர் பாஸ்வான் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஜிஎஸ்டி தொடர்பாக நுகர்வோர்களின் குறைகளைத் தீர்க்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க ஏற்கெனவே இருந்த 14 குறை தீர் முகாம்களின் எண்ணிக்கை தற்போது 60- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பழைய எம்ஆர்பி விலையில் விற்பனையாகாமல் உள்ள பொருள்களின் மீது புதிய எம்ஆர்பி விலை கொண்ட ஸ்டிக்கரை ஒட்டுமாறு உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய விலை அச்சிடப்படவில்லையெனில், முதல் முறை ரூ.25ஆயிரமும், இரண்டாவது முறை ரூ.50ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.
அதன் பிறகும் விதிகளை பின்பற்ற மறுத்தால் ரூ.1 லட்சம் வரை அபராதத்துடன் ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றார் பாஸ்வான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com