துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்கட்சிகளின் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு

விரைவில் நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சி கூட்டணி  வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்கட்சிகளின் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு

புதுதில்லி: விரைவில் நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சி கூட்டணி  வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்கட்சிகளின் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம், இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.காங்கிரஸ் கட்சித்தலைவி சோனியா காந்தி இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் ஒருங்கிணைந்த ஜனதா தளம், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் துணை ஜனாதிபதி தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சி கூட்டணி  வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசப்பிதா மகாதமா காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி இதற்கு முன்பு மேற்கு வங்க   மாநில ஆளுநர் உட்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com