ஜியோ வாடிக்கையாளர்கள் தகவல்கள் கசியவிட்ட ஹேக்கர்  இம்ரான் ஷிம்பா கைது

ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் தனியார் இணையதளம் ஒன்றில் வெளியானதாக எழுந்த புகாரின் பெயரில் ராஜஸ்தானைச் சேர்ந்த
ஜியோ வாடிக்கையாளர்கள் தகவல்கள் கசியவிட்ட ஹேக்கர்  இம்ரான் ஷிம்பா கைது

ஜெய்ப்பூர்: ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் தனியார் இணையதளம் ஒன்றில் வெளியானதாக எழுந்த புகாரின் பெயரில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரை மராட்டிய மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ சிம் வாங்க மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் போல் அல்லாமல், ரிலையன்ஸ் ஜியோ, ஆரம்பத்திலேயே சிம் கார்டு பெற ஆதார் எண் அவசியம் என்பதை கட்டாயமாக்கியது.

இதையடுத்து அந்நிறுவனம் அளிக்கும் அதிரடி சலுகைகள் பெறுவதற்காக தங்களது ஆதார் எண் விவரங்களை அளித்து சுமார் 12 கோடிக்கும் மேற்பட்டோர் ஜியோ சிம் வாங்கினார்கள். இதையடுத்து தொலைத் தொடர்புத் துறையில் புதிய புரட்சியைப் படைத்தது ஜியோ.

இந்தநிலையில் ஜியோ வாடிக்கையாளர்களின் விவரங்களும் magicapk.com என்ற தனியார் இணையதளத்தில் வாடிக்கையாளர்களின் பெயர், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, பகுதி, சிம் கார்ட் ஆக்டிவேட் ஆன தேதி, ஆதார் எண் என அனைத்துத் தகவல்களையும் அந்த இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்த செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மறுப்பு தெரிவித்திருந்ததுடன் தங்களது வாடிக்கையாளர்களின் விபரங்கள் முழு பாதுகாப்போடு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. மேலும், இது குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் தெரிவித்து.

இந்நிலையில், இது தொடர்பான புகாரில் ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தைச் சேர்ந்த இம்ரான் ஷிம்பா ஒருவரை மராட்டிய மாநில சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் விசாரணையில், பொறியியல் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திய அந்த இளைஞர் ஹேக்கராக செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் வைத்திருந்த கணினி மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றை ஆய்வுக்காக அனுப்பியுள்ளதாக போலீஸார் தரப்பில் முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகும் என தெரியவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com