நான் மக்களின் வேட்பாளர்: கோபாலகிருஷ்ண காந்தி

நான் என்னை மக்களின் வேட்பாளராக கருதுகிறேன் என குடியரசுத் துணைத் தலைவருக்கான எதிர்கட்சி வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்தார்.
நான் மக்களின் வேட்பாளர்: கோபாலகிருஷ்ண காந்தி

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான எதிர்கட்சிகளின் ஒன்றினைந்த வேட்பாளராக காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, மேற்குவங்கத்தின் ஆளுநராக 2004 முதல் 2009 வரை இவர் செயல்பட்டுள்ளார்.

இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் குறித்து கோபாலகிஷ்ண காந்தி கூறியதாவது:

என்னைப் பற்றி பேசுவதற்கு நான் என்றும் விரும்பியதில்லை. ஆனால், தற்போது இந்தியாவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை (தீவிரவாத பிரச்னை) குறித்து விவாதிக்க நிறைய உள்ளது. இதானால் மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. 

என்னை குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தலில் வேட்பாளராக தேர்வு செய்ததற்கு அனைத்து எதிர்கட்சிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. நான் ஒரு சாதராண இந்தியக் குடிமகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். எனவே என்னை மக்களின் வேட்பாளராகவே கருதுகிறேன்.

நம் நாட்டின் எதிர்காலத்தை நினைத்து வருத்தமாக உள்ளது. அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதுவே என் முதல் இலக்கு என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com