காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு: ஜூலை 18-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு!

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நதிநீர் பங்கீடு வழக்கினை ஜூலை 18-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு: ஜூலை 18-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு!

புதுதில்லி: தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நதிநீர் பங்கீடு வழக்கினை ஜூலை 18-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007- இல் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது.

இந்த விசாரணையானது தொடர்ந்து 15 வேலை நாள்களுக்கு நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த மூன்று நாட்களாக விசாரணையானது நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.

இரு தரப்புகளும் தங்கள் தரப்பு வாதத்தினை முன்வைத்து வந்த நிலையில் வழக்கினை வரும் ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

அப்பொழுது கர்நாடகம் தன் தரப்பு வாதத்தினை விரிவாக முன்வைக்குமாறு கூறியுள்ள உச்சநீதிமன்றம், காவிரி போன்ற முக்கியமான வழக்குகளில் வெறுமனே புத்தகங்களில் உள்ளதை வைத்து ஒரு முடிவுக்கு வர  முடியாது என்றும், உண்மையான நிலவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றும் கருத்து கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com