சிறையில் சசிகலாவுக்கு தனி சமையலறையா? மறுக்கும் கர்நாடக டிஜிபி சத்யநாராயணன்

பரப்பன அக்ரஹார சிறையில், சசிகலாவுக்கு விஐபி மரியாதை வழங்கப்படுவதாகவும், அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படும் புகார்களை கர்நாடக சிறைத் துறை டிஜிபி சத்யநாராயணன் மறுத்துள்ளார்.
சிறையில் சசிகலாவுக்கு தனி சமையலறையா? மறுக்கும் கர்நாடக டிஜிபி சத்யநாராயணன்

பெங்களூரு: பரப்பன அக்ரஹார சிறையில், சசிகலாவுக்கு விஐபி மரியாதை வழங்கப்படுவதாகவும், அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படும் புகார்களை கர்நாடக சிறைத் துறை டிஜிபி சத்யநாராயணன் மறுத்துள்ளார்.

பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சத்யநாராயணன், பரப்பன அக்ரஹாரத்தில் சசிகலாவுக்கு விஐபிக்கான சலுகைகள் வழங்கப்படுவதாகக் கூறப்படுவதில்லை உண்மை இல்லை.

சட்டங்களை மீறி, சிறையில் தனி சமையலறை அமைக்கப்பட்டு உணவுகள் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சசாட்டுகளுக்கு ஆதாரமில்லை.

இது குறித்து புகார் அனுப்பியதாகக் கூறப்படும் டிஐஜி ரூபாவுக்கு மெமோ அளிக்கப்பட்டுள்ளது. அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும் அல்லது விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

அதோடு, சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்த சத்யநாராயணன், சசிகலா தரப்பிடம் இருந்து லஞ்சம் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பின்னணி: சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற அதிமுக பொதுச் செயலர் சசிகலாவுக்கு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் விஐபிகளுக்கான அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பரபப்பன அக்ரஹார சிறையில் ஆய்வு நடத்திய சிறைத் துறை உதவி ஆய்வாளர் (டிஐஜி) ரூபா மௌட்கில், இது குறித்து மாநில அரசுக்கு அனுப்பிய புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்கள் குறித்து உள்ளூர் சேனல்களில் செய்தி கசிந்தது.

அதாவது, கர்நாடக மாநில சிறைத் துறை இயக்குநர் (டிஜிபி) சத்யநாராயண ராவுக்கும், சிறைத் துறை அதிகாரிகளுக்கும் இதற்காக ரூ.2 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரூபா எழுதியுள்ள புகார் கடிதத்தில், சிறையில் சசிகலாவுக்கு அனைத்து வசதிகளையும் செய்துத்தர, கர்நாடக சிறைத் துறை இயக்குநர்  சத்யநாராயண ராவுக்கு ரூ.1 கோடியும், மத்திய சிறைச்சாலை வார்டன் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் மொத்தமாக ரூ.1 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com