விரைவில் நாடு முழுவதும் 2 அடுக்கு சொகுசுப் பேருந்துகள் அறிமுகம்

 நாடு முழுவதும் இரண்டு அடுக்கு சொகுசுப் பேருந்துகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
விரைவில் நாடு முழுவதும் 2 அடுக்கு சொகுசுப் பேருந்துகள் அறிமுகம்

 நாடு முழுவதும் இரண்டு அடுக்கு சொகுசுப் பேருந்துகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
நாட்டில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால், சுற்றுச்சூழல் மாசுபாடு பல மடங்காக உயர்ந்துள்ளது. மேலும், இவற்றின் எரிபொருள் தேவையை சமாளிக்க, வெளிநாடுகளிலிருந்து ஆண்டுதோறும் ரூ.7 லட்சம் கோடி செலவில் பெட்ரோல், டீசலை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
எனவே, பெட்ரோல், டீசல் அல்லாத மாற்று எரிபொருள்களில் இயங்கக் கூடிய வாகனங்களை தயாரிப்பதும், தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை குறைப்பதுமே நாட்டின் தற்போதைய அத்தியாவசியத் தேவை.
அந்த வகையில், தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக அரசுப் பேருந்து போக்குவரத்தினை முற்றிலுமாக சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, நாடு முழுவதும் விரைவில் இரண்டு அடுக்குகளைக் கொண்ட சொகுசுப் பேருந்துகளை அறிமுகம் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக, இந்த சொகுசுப் பேருந்துகளை தில்லி - மும்பை, தில்லி - ஜெய்ப்பூர், தில்லி - லூதியானா மார்க்கங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும், இந்தப் பேருந்துகள் மாற்று எரிபொருளில் இயங்கக் கூடியது என்பதால் அவற்றின் பயணக் கட்டணங்கள் தற்போது இருப்பதை விட குறைவாக இருக்கும்.
இதுபோன்ற பேருந்துகளை மெத்தனால் எரிபொருள் மூலமாக இயக்குவதற்கு "வால்வோ' நிறுவனம் தயாராக உள்ளது.
இதுதவிர, மின்சாரத்தால் இயங்கக்கூடிய லாரிகளையும், பேருந்துகளையும் தயாரிப்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது என்றார் நிதின் கட்கரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com