நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத் தொடரை முன்னிட்டு தில்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்!

நாளை துவங்க உள்ள நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தும் பொருட்டு, மத்திய  அரசு ஏற்பாடு செய்துள்ள அனைத்துக்கட்சி கூட்டம் தற்பொழுது தில்லியில் நடைபெறு வருகிறது
நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத் தொடரை முன்னிட்டு தில்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்!

புதுதில்லி: நாளை துவங்க உள்ள நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தும் பொருட்டு, மத்திய  அரசு ஏற்பாடு செய்துள்ள அனைத்துக்கட்சி கூட்டம் தற்பொழுது தில்லியில் நடைபெறு வருகிறது

நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத் தொடர் நாளை துவங்கி நடைபெற உள்ளது. ஜி.எஸ்.டி அமலாக்கம், சீனாவுடன் எல்லை பிரச்சினை, அமர்நாத் தீவிரவாதிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அவையில் கிளப்ப, எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளது.

அத்துடன் மத்திய அரசுக்கு எதிரான விஷயங்களில் இணைந்து செய்லபடவும் எதிர்க்கட்சிகள் கொள்கை அளவில் முடிவு செய்துள்ளன. எனவே நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தும் பொருட்டு, அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றினை மத்திய  அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, முக்தர் அப்பாஸ் நக்வி மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கின்றனர். எதிர்க்கட்சிகளின் சார்பில் குலாம் நபி ஆசாத், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள்.

இந்த முக்கியமான கூட்டத்தினை திரிணாமுல் கட்சி புறக்கணித்துள்ளது. அதே நேரம் நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் இதே போன்றதொரு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு இன்று   மாலை அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com