பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை: நரேந்திர மோடி

""பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர்
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர்

""பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
நாடு முழுவதும் "பசுப் பாதுகாப்பு' என்ற பெயரில் தலித் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள்
குற்றம்சாட்டி வருகின்றன. இந்த விவகாரத்தை, திங்கள்கிழமை தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எழுப்புவதற்கும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக, பின்னர் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பசுவை தாயாகக் கருதுவது பெரும்பாலான ஹிந்துக்களின் நம்பிக்கை. பசுவைப் பாதுகாப்பதற்கு சட்ட வழிமுறைகள் உள்ளன. ஆனால், அதற்காக சட்டத்தை மீறுவது சரியாகாது.
பசுப் பாதுகாப்பு என்ற பெயரில், வன்முறையில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு எதிராக அனைத்து மாநில அரசுகளும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டம்}ஒழுங்கு பராமரிப்பை மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும். அதே நேரம், பசு பாதுகாப்பு விவகாரத்துக்கு அரசியல் சாயமோ, மதச் சாயமோ பூசக்கூடாது.
குடியரசுத் தலைவர் தேர்தல் திங்கள்கிழமை (ஜூலை 17) நடைபெறவுள்ளது. குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில், அனைத்துக் கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
எனினும், இந்தத் தேர்தலுக்கான பிரசாரத்தில், ஆளும் பாஜக கூட்டணி தரப்பிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பிலும் கண்ணியம் காக்கப்பட்டது. இரு தரப்பிலும், யாரும் தரம் தாழ்ந்து விமர்சித்துக் கொள்ளவில்லை.
குடியரசுத் தலைவர் தேர்தலில், அனைத்து வாக்குகளும் பதிவு செய்யப்படுவதை அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஊழலில் ஈடுபடுவோர் காப்பாற்றப்பட மாட்டார்கள். ஊழலில் ஈடுபட்ட காரணத்துக்காக, அரசியல் தலைவர் ஒருவரின் நன்மதிப்பு குறைந்து வருகிறது. (ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாதைக் குறிப்பிடுகிறார்).
வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டதன் 75}ஆவது ஆண்டு தினம், வரும் ஆகஸ்ட் 8}ஆம் தேதி வருகிறது. அந்த நாளை அனைத்து அரசியல் கட்சிகளும் கொண்டாட வேண்டும்.
சரக்கு}சேவை வரி அமலாக்கத்துக்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டாட்சித் தத்துவத்துக்கு இந்தச் சம்பவமே மிகச்சிறந்த உதாரணமாகும்.
ஜனநாயகம் காக்கப்பட வேண்டுமெனில், நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெறும் விதமாக, அனைததுக் கட்சிகளும் அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது முக்கியமாகும் என்று மோடி பேசியதாக, அனந்த் குமார் கூறினார்.
மேலும், காஷ்மீர் பிரச்னை, சீனாவுடனான மோதல் ஆகிய விவகாரங்களில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் தெரிவித்ததாக அமைச்சர் அனந்த் குமார் கூறினார்.
நாடாளுமன்ற இரு அவைகளும் அமளி எதுவுமின்றி சுமுகமாக இயங்குவதற்கு, கட்சி வேறுபாடுகளின்றி அனைவரும் உறுதியளித்திருப்பதாக, பின்னர் வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் சிரமங்களைக் குறைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்சிக் கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, சமாஜவாதித் தலைவர் முலாயம் சிங் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜேடியு, திரிணமூல் புறக்கணிப்பு: இந்தக் கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com