போக்ரானில் இந்தியா பீரங்கி சோதனை

போக்ரானில் இந்தியா பீரங்கி சோதனை

அமெரிக்காவிடமிருந்து அண்மையில் பெறப்பட்ட எம்}777 ஏ}2 என்ற சிறிய ரக பீரங்கிகளை ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில் இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்தது.

அமெரிக்காவிடமிருந்து அண்மையில் பெறப்பட்ட எம்}777 ஏ}2 என்ற சிறிய ரக பீரங்கிகளை ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில் இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்தது.

ஸ்வீடன் நாட்டின் போஃபர்ஸ் நிறுவனத்திடமிருந்து தொலைதூரம் சென்று தாக்கும் சிறிய ரக பீரங்கிகளை வாங்குவதற்கு இந்திய ராணுவம் 1980-களின் மத்தியில் ஒப்பந்தம் மேற்கொண்டது. எனினும், இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, சிறிய ரக பீரங்கிகளை வாங்கும் முடிவு கைவிடப்பட்டது.
இந்தச் சூழலில், இந்திய எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, அமெரிக்காவிடமிருந்து சிறிய ரக பீரங்கிகளை வாங்குவது என்று இந்தியா முடிவு செய்தது. பாகிஸ்தானையொட்டிய இந்திய எல்லைப் பகுதிகள் மலைப் பிரதேசம் என்பதால், அங்கு பெரிய பீரங்கிகளைக் கொண்டு செல்வது மிகுந்த சிரமமாகும். எனவே, சிறிய ரக பீரங்கிகளின் தேவையைக் கருதி, இந்தியா இந்த முடிவை எடுத்தது.
இதையடுத்து, அமெரிக்காவிடமிருந்து நவீன ரகத்திலான சிறிய பீரங்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கையெழுத்தானது. சுமார் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் 145 பீரங்கிகள் வாங்குவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பீரங்கிகளை 2019-ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் இணைக்க திட்டமிட்டப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இரண்டு எம்}777 ஏ}2 ரக சிறிய பீரங்கிகளைக் கொண்டு போக்ரானில் இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்தது. சிக்கிம் எல்லையில் சீன ராணுவம் நெருக்கடி கொடுத்து வரும் சூழலில், இந்தியா இத்தகைய சோதனையில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com