சசிகலா விவகாரம்: கர்நாடக சிறைத்துறை புதிய டி.ஐ.ஜி நியமனம்!

கர்நாடக சிறைத்துறை புதிய இயக்குநராக ஹெச்.எஸ். ரெவன்னா ஐபிஎஸ், செவ்வாய்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். 
சசிகலா விவகாரம்: கர்நாடக சிறைத்துறை புதிய டி.ஐ.ஜி நியமனம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிரையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இங்கு சிறைத்துறை உதவி ஆய்வாளர் ரூபா மௌட்கில், திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வில் கிடைத்த தகவல்கள் குறித்து மாநில அரசுக்கு அனுப்பிய புகார் கடிதத்தில் குறிப்பிடிருந்த விஷயங்கள் குறித்து உள்ளூர் சேனல்களில் செய்தி கசிந்தது.

அதில், கர்நாடக சிறைத்துறை இயக்குநருக்கும், சிறைத்துறை அதிகாரிகளுக்கும் ரூ.2 கோடி அளவுக்கு சசிகலா விவகாரத்தில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ரூபாவின் இந்த குற்றச்சாட்டு சத்யநாராயண ராவ் தரப்பில் மறுக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக ரூபா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சசிகலாவுக்கு பரப்பன அக்ரஹார சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. இதுதொடர்பாக நான் அளித்த புகாரில் தெளிவாக இருக்கிறேன். இதனால் என் மீது நடவடிக்கை எடுத்தால் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என்றார்.

இதுதொடர்பாக அம்மாநில அரசு ரூபாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. உடனே, சசிகலா தொடர்பான ஆதாரங்கள் அவசரகதியில் அழிக்கப்படுவதாக ரூபா மீண்டும் குற்றஞ்சாட்டினார். இதனால் அவர் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 

இதையடுத்து சிறைத்துறை இயக்குநராக சத்யநாராயண ராவ் மாற்றப்பட்டு என்.எஸ். மேக்ஹாரிக், செவ்வாய்கிழமை காலை கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டார். 

இந்நிலையில், புதிய கர்நாடக சிறைத்துறை உதவி ஆய்வாளராக ஹெச்.எஸ். ரெவன்னா ஐபிஎஸ், செவ்வாய்கிழமை மாலை நியமிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com