தொலைத்தொடர்புத் துறையில் ஜிஎஸ்டி-யின் தாக்கம் குறித்து ஆய்வு

தொலைத்தொடர்புத் துறையில் சரக்கு-சேவை வரியின் (ஜிஎஸ்டி) தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
தொலைத்தொடர்புத் துறையில் ஜிஎஸ்டி-யின் தாக்கம் குறித்து ஆய்வு

தொலைத்தொடர்புத் துறையில் சரக்கு-சேவை வரியின் (ஜிஎஸ்டி) தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
செல்லிடப்பேசி சேவை, தொலைப்பேசி சேவை, இணையதள சேவைகளுக்கு ஜிஎஸ்டி-க்கு முன்பு 15 சதவீத வரியை பொதுமக்கள் செலுத்தி வந்தனர். ஆனால், ஜிஎஸ்டி-க்குப் பிறகு இந்த வரி 18 சதவீதமாக அதிகரித்துவிட்டது. எனினும், வரித் தொகையைத் திரும்பப் பெறும் வசதி மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக பொதுமக்களுக்கு தொலைத்தொடர்பு சேவை குறைவான விலையில் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வரித் தொகையைத் திரும்பப் பெறும் வசதி மூலம் கிடைக்கும் பயனை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நுகர்வோருக்கு அளிக்க வேண்டும். எனினும், வெவ்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் வெவ்வேறு மாதிரியான நடைமுறைச் செலவுகள் உள்ளன.
ஜிஎஸ்டி-யால் தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். உண்மையாகவே ஏதாவது பிரச்னை இருந்தால் அது குறித்து மத்திய நிதியமைச்சருடன் ஆலோசனை நடத்துவோம்.
1.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அகன்ற அலைக்கற்றை இணைய சேவை வசதி அளிக்கும் பாரத் நெட் திட்டத்தின் இரண்டாவது பகுதி மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
தொலைத்தொடர்புத் துறை கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது. அடுத்ததாக 5ஜி, இணையவழி உலகம், செயற்கை அறிவாற்றல் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வர உள்ளன. எனவே, புதிய தொலைத் தொடர்புக் கொள்கையை கொண்டுவரும் முன்பு பல்வேறு தரப்புடன் ஆலோசிக்க வேண்டியுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com