மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் ஜிஎஸ்டியின் தாக்கம் இருக்கும்: பிரதமர் மோடி நம்பிக்கை

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முழுமையும், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தரும் உற்சாகத்தின் தாக்கம் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி
மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் ஜிஎஸ்டியின் தாக்கம் இருக்கும்: பிரதமர் மோடி நம்பிக்கை

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முழுமையும், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தரும் உற்சாகத்தின் தாக்கம் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தில்லியில் இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழ'மை கூறியதாவது:
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. கோடை காலத்துக்குப் பிறகு, மழை பொழியும்போது, மண்ணில் இருந்து புதிய ரம்மியமான வாசனை வரும். அதேபோல், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரும், ஜிஎஸ்டி வரி வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதால் உற்சாகம் ஏற்பட்டுள்ள நிலையில் தொடங்கியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரானது, அனைத்து அரசியல் கட்சிகள், எம்.பி.க்கள் தரமான விவாதம் நடத்துவதற்கான வாய்ப்பை தரும் என்றும், தேசிய நலன் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புகளை வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ஜிஎஸ்டி மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருப்பது, அனைத்து அரசியல் கட்சிகளும், அரசுகளும் ஒருங்கிணைந்து, நாட்டுக்காக பணியாற்றினால், நல்ல பணிகளை சாதிக்க முடியும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
எப்போதெல்லாம், தேசிய நலனை மனதில் கொண்டு அரசியல் கட்சிகளும், அரசும் முடிவுகளை எடுக்கின்றனவோ, அப்போதெல்லாம், அவை நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகளை செய்ய விரும்புகின்றன என்பதை வெளிப்படுத்துகின்றன.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதில் இருந்து இது நிரூபணமாகியுள்ளது. ஜிஎஸ்டியின் மெய்ப்பொருள், அனைவரும் ஒன்றிணைந்து வளர்ச்சியடையவதுதான். இதே ஜிஎஸ்டி மெய்ப்பொருளின் தாக்கம், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முழுவதும் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதியுடன் நமது நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதேபோல், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் பாதியில், அதாவது ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதியன்று, சுதந்திர போராட்டத்தின்போது வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆதலால், இந்த கூட்டத் தொடர் நமக்கு மிகவும் முக்கியமானது என்று பிரதமர் மோடி கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், ஜிஎஸ்டி மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் அந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளித்தன.
இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு மாநில சட்டப் பேரவைகளிலும் ஜிஎஸ்டி வரியை செயல்படுத்த ஏதுவாக மாநில ஜிஎஸ்டி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி கடந்த 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com