பரோலில் தப்பிய சிறைக் கைதி: 25 ஆண்டுகளுக்கு பிறகு சிறைக்கு திரும்பிய அதிசயம்!

கொலைக் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருந்த பொழுது பரோலில் தப்பிய கைதி, 25 ஆண்டுகளுக்கு பிறகு சிறைக்கு திரும்பிய அதிசயம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது
பரோலில் தப்பிய சிறைக் கைதி: 25 ஆண்டுகளுக்கு பிறகு சிறைக்கு திரும்பிய அதிசயம்!

திருவனந்தபுரம்: கொலைக் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருந்த பொழுது பரோலில் தப்பிய கைதி, 25 ஆண்டுகளுக்கு பிறகு சிறைக்கு திரும்பிய அதிசயம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது

கேரளாவின் கொச்சி மாவட்டத்தில் உள்ள மட்டஞ்சேரி என்ற ஊரைச் சேர்ந்தவர் நாசர். கொலை வழக்கு ஒன்றில் நான்கு நபர்களோடு குற்றம் சாட்டப்பட்ட இவர், 1991-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பூஜப்புரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு நாசருக்கு 1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு மாதம் பரோல் கிடைத்தது. ஆனால் பரோல் காலம் முடிந்து சிறைக்கு திரும்பாமல் தப்பித்துச் செல்ல நாசர் திட்டமிட்டார்.

எனவே வளைகுடா நாடு ஒன்றுக்கு தப்பிச்சென்ற நாசர் அங்கே சிறு சிறு வேலைகள் செய்து வாழக்கை நடத்தியதாக கூறப்பகிறது. திருமணமே செய்து கொள்ளாத நாசர், கேன்சர் நோய் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டு, ஐந்து வருடங்களுக்கு முன்பு கேரளா திரும்பினார்.

சில சிகிச்சைகள் மேற்கொண்டு வந்த நாசர் இனிமேலும் தனது குடும்பத்திற்கு பாரமாக இருக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார். இதனால் மீண்டும் சிறைக்கே சென்று விடுவது என்று அவர் தீர்மானித்தார். அதன்படி நேற்று மாலை பூஜப்புரா மத்திய சிறை சென்ற அவர் தான் யார் என்பதை தெரிவித்தார்.

முதலில் ஆச்சர்யத்துக்கு உள்ளான அதிகாரிகள், பின்னர் ஆவணங்களை சோதனை செய்த பின்னர் அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அங்குள்ள சக கைதிகளுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com