பள்ளி புத்தகப் பைகளின் எடைக்கு உச்சவரம்பு; வீட்டுப்பாடம் கூடாது: தெலங்கானா அரசின் அசத்தல்

பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளிச் சிறார்கள் கொண்டு வரும் புத்தகப்பையின் எடைக்கு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது தெலங்கானா மாநில அரசு.
பள்ளி புத்தகப் பைகளின் எடைக்கு உச்சவரம்பு; வீட்டுப்பாடம் கூடாது: தெலங்கானா அரசின் அசத்தல்


ஹைதராபாத்: பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளிச் சிறார்கள் கொண்டு வரும் புத்தகப்பையின் எடைக்கு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது தெலங்கானா மாநில அரசு.

அதாவது, ஒன்றாம் வகுப்பு முதல் 2ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணாக்கரின் புத்தகப் பை 1.5 கிலோவும், 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணாக்கரின் பையின் எடை 2 முதல் 3 கிலோ வரையிலும் இருக்கலாம். ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு நோட்டு என்றில்லாமல், அனைத்து பாடத்துக்கும் ஒரே நோட்டு பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், ஒவ்வொரு பாடத்துக்கும் 200 பக்கங்களைக் கொண்ட தனித்தனி நோட்டுப் புத்தகங்களை தினமும் கொண்டு வர வேண்டாம். பதிலாக, மாணவர்கள் ஒரே ஒரு பொதுவான நோட்டுப் புத்தகத்தைக் கொண்டு வந்து அனைத்து பாடங்களையும் அதில் எழுதிக் கொள்ளலாம் என்றும், இதனால் புத்தகப் பையின் எடை நிச்சயம் குறையும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை பின்பற்றி, மேல்நிலைப் பள்ளி மாணாக்கரின் புத்தகப் பை 4 கிலோவும், உயர்நிலைப் பள்ளி மாணக்கரின் புத்தகப் பை 5 கிலோக்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நற்செய்தி இதோடு முடிந்துவிடவில்லை... தொடர்கிறது. தெலங்கானா அரசின் அந்த அறிக்கையில், முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்றும், ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்தில் வீட்டுப்பாடம் கொடுக்கும் வகையில் கால அட்டவணை நிர்ணயிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஏராளமான பாடங்களை குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறேன் என்று திணிப்பதையும் தெலங்கானா அரசு கட்டுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com